பட்டா பெயர் மாறுதல் செய்ய 17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
தையல்கடைக்காரரிடம் ரூபாய்.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா காட்டூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெயக்குமார் (வயது 51). அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50), தையல் கலைஞர். இவருக்கு பூர்வீக நிலம் உள்ளதற்கான ஆவணங்கள் படி பட்டாவில் அவரது பெயரை மாற்றுவ தற்காக ராமமூர்த்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.பட்டா மற்றும் செய்ய காலதாமதம் இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்
அதற்கு ரூபாய்.40 ஆயிரம் ஜெயக் குமார் லஞ்சமாகக் கேட்டதாகவும், முதல் தவ ணையாக ரூபாய்.10 ஆயிரமும், 2வது தவணையாக ரூபாய்.13 ஆயிரமும் ஜெயக்குமார் பெற்றுள்ளார். இதற்கிடையே 3வது தவணையாக ரூபாய்.17 ஆயிரத்தை ஜெயக்குமார் கேட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப் பட்ட ராமமூர்த்தி, இது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத் தார். அதன் பேரில், துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை
யில் ஆய்வாளர் கீதாலட்சுமி மற் றும் குழுவினர் நேற்று சம்பந் தப்பட்ட நிலம் அருகே மறைந்து பதுங்கி இருந்தனர்.
அப்போது அங்கு 17 ஆயி ரம் ரூபாய் பினாப்தலீன் இரசா யனம் தடவிய நோட்டுகளை ராமமூர்த்தி கொண்டு வந்த நிலையில் திரும்ப அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்து அனுப்பினர். இதனை ஜெயக்குமார் பெற்ற போது அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர்.
தொடர்ந்து அவரி டம் விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்து நீநிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர்.

கருத்துகள்