அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடியாக சேர்த்த ரூபாய்.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும், 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை
கையகப்படுத்திய போது அதை தனிநபர்கள் அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த மோசடி மற்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் - தொடர்பாக, 15 இடங் களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத் தில், சென்னை பெங் களூரு தேசிய நெடுஞ் சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங் களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது. நெமிலி கிராமத்தில், அதேபோல் 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ். ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு, பத்திரம் பதிவு செய்து வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள, ஓ.எஸ்.ஆர்.
நிலங்களுக்கு, பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட் இழப்பீடு டுள்ளது.
வி ஜி பி ஹவுசிங் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்' வடகால் கிராமத்தில், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள, சாலை, பூங்கா பரப்பான, 7.25 லட்சம் சதுரடி இடத்தை அரசுக்கு விற்று, 21.08 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, நில எடுப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன், தாசில்தார் எழில்வளவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தனி நபர்கள் என, 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும், போலி ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கலைச்செல்வன் மோசடி காரணமாக அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அலுவலர்கள்
சோதனை' அவரது வீடு உட்பட, 15 இடங் களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்காட் விரிவாக்கம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்திக் காட்டி, அரசிடமிருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று மோசடி செய்திருப்பது, உறுதி செய்யப்பட்டது. இதில், வி.ஜி.பி., குழுமத்தை சேர்ந்த ராஜேஷ், முக்கியப் பங்கு வகித்திருப்பதும் தெரிய வந்த நிலையில்
சோதனையில் சிக்கிய ரூபாய் 74 லட்சம் , 1.56 கோடி ரூபாய் ரொக்கம், ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8.40 கோடி ரூபாய் வங்கி இருப்பு, 7.40 கோடி ரூபாய்க்கான பங்குப் பத்திரங்கள் என, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை அலுவலர்கள் முடக்கியுள்ளனர்.








கருத்துகள்