வீட்டுமனையிடம் பதிவு செய்ய, ரூபாய் 2 லட்சம் லஞ்சம் வாங்கிய தாம்பரம் சார் - பதிவாளர் கைது.
தாம்பரம் சார் பதிவு வட்டம் பிரவின்குமார். நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருநத நிலையில். விண்ணப்பத்தைப் பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, தனக்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின் போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதியுள்ள லஞ்சப்பணம் ரூபாய் 8 லட்சத்தை பத்திரம் திரும்ப வாங்கும் போது, தருவதாகவும் கூறியுள்ளார். பின் இலஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ததையடுத்து ஊழல் சார்பதிவாளரை பணம் பெற்ற கையுடன் பொறி வைத்துப் பிடிப்பதற்காக புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப் படி பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய மனுதாரர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை அவரிடமே கொடுத்து அதனை லஞ்சமாக அரசு சாட்சி முன்னிவையில் சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.
அதன்படி தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை சார் பதிவாளர் ரேவதியின் அறிவுறுத்தலின் பேரில் பத்திரப்பதிவுப் பணிகள் செய்யும் நபரிடம் பிரவீன் குமார் கொடுத்தார். அவர் ரூபாய்.2 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாய்ந்து சென்று சார்பதிவாளர் ரேவதி மற்றும் பத்திர எழத்தர் இருவரையும் பிடித்து விசாரணைக்குப் பின் கைது செய்தனர். மேலும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் படி பத்திரப்பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் எவ்வளவு புகார்கள் செய்தாலும், சார் பதிவாளர் ரேவதி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்காக ஐஜி அலுவலக உயர் அலுவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேவதி தனியாகவே கப்பம் கட்டி கவனித்து வந்துள்ளார். இதனால் பொதுமக்களின் நேரடிப் புகார்கள் ஐஜி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பதிவுத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர். ரேவதியின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.லஞ்சம் பெறுவதில் அராஜகம் செய்து வந்த ரேவதி தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார்.
முதலில் அங்கு அவர் தலைமை எழுத்தராகவும், பின்னர் சார் பதிவாளர் இல்லாததால் ரேவதி பொறுப்பு சார் பதிவாளராக இருந்து வந்தார். ரேவதிக்கு உதவியாளராக குணசுந்தரி என்ற பெண் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக ரேவதி மற்றும் குணசுந்தரி வைப்பது தான் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அராஜகச் சட்டமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது..
பொதுமக்கள் எந்த பத்திரப்பதிவிற்கு சென்றாலும் அதற்கு ஒரு பெரும் தொகையை நிர்ணயம் செய்து அதனைப் பெற்றுக் கொண்டுதான் இவர்கள் பத்திரப்பதிவு வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.








கருத்துகள்