தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் செய்யப்பட்டுள்ள திருத்தம் டிஜிட்டல் சூழல் அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது
தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் தொலைத்தொடர்புத் துறை சில திருத்தங்களை 22.10.2025 அன்று மேற்கொண்டது. இந்தத் திருத்தம் வங்கித்துறை, மின் வணிகம், மின் நிர்வாகம் போன்றவற்றில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்குத் தேவையானதாகும்.
திருத்தப்பட்ட விதிகள் தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகளில் உள்ள இடைவெளிகளை சரி செய்து சைபர் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் திருத்தங்கள் 22.10.2025 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டிலிருந்த சிறு குறைபாடுகளைச் சரி செய்ய மீண்டும் 25.11.2025 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது


கருத்துகள்