உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்ற இந்திய குழுவினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;
“நமது குத்துச்சண்டை வீரர்களின் பிரமிக்கவைக்கும் செயல்பாடு! உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று நமது நாட்டின் பெருமையை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ள நமது அணிக்கு மனமார்ந்த வாழத்துகள். உங்கள் கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் திறன்கள் வளர்ந்துவரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான பாதையாகும். உங்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்”



கருத்துகள்