டெல்லி செங்கோட்டை அருகில் நகர்ந்த குண்டாய் காரில் குண்டு வெடித்து. காயம் 24, உயிரிழப்பு 10 தீவிரவாதிகளின் சதி விசாரணை தீவிரம்
தேசியத் தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகில் நகர்ந்த குண்டாய் காரில் குண்டு வெடித்து. காயம் 24, உயிரிழப்பு 10. காயமும், உயிரிழப்பும், எண்ணிக்கையில் இன்னும் கூடலாம் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
வெடித்துச் சிதறிய காரின் பாகங்கள் போலவே, மனித உடல்களும் தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது சோகம். வெடித்த காரால் அருகிருந்த 14 கார்களும், சிதறி நாலாபுறமும் கிடப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் சுற்றுலா பாய்ன்ட்டும் உள்ள அதிமுக்கிய இடத்தில்தான் இது நடந்துள்ளது.
பீஹாரில் நாளை இரண்டாம்கட்டத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளதால் கார்வெடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது, அதேபோல் உத்திரப்பிரதேசம் .முழுவதும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் சதிச்செயல் என்பது தெரிந்தாலும் NIA விசாரணைக்குப் பின்னரே அனைத்தும் தெரியவரும். வதந்திகள், போலியான தகவலை சுமந்து வரும் ஏ.ஐ. வீடியோக்களை தவிர்ப்பதும் உருவாக்கி உலவ விடாமல் இருப்பதும்; காவல்துறை விசாரணைக்கு பொதுமக்கள் செய்யக் கூடிய பேருதவியாய் இருக்கும். இப்போதே சென்னை, கோயம்பத்தூர் போன்ற நகரங்கள், நாடுமுழுவதுமுள்ள ரெயில் நிலையங்கள், முக்கியப் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு, சோதனை என்ற சூழ்நிலையில், பொதுமக்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தேவையற்ற சீண்டல்கள் வேண்டாம்.
N.I.A./ N.S.G./ DELHI HQ காவல்துறை கமிஷனர் சதீஷ் கோல்ஷா போன்றோரின் நேரடி கள ஆய்வு முடிவுகள், ஃபாரன்ஸிக், வெடிகுண்டு சோதனை நிபுணர்களின் ஆய்வுமுடிவுகள் வரட்டும், அதுவரை கிடைக்கிற எல்லாத் தகவல்களையும் பரப்பி விடாமல் இருப்பது பத்திரிகை தர்மம்
தீவிரவாதமா என ஒருவரிடம் விசாரணை
டெல்லி கார் குண்டு வெடிப்பில் அதிகரித்த உயிரிழப்பு உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி தலைநகா் டெல்லியில் மிகப்பொிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவா் கைது
300 கிலோ வெடிபொருட்களுடன் ஆண் மருத்துவா்கள் கைதான நிலையில் உடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது.















கருத்துகள்