இந்திய உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார்
ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு பணியில் துவங்கிய 24-05-2019 ஆம் தேதி முதல் 09-02-2027 ஆம் தேதி வரை பதவிக்காலமாகும்
பிப்ரவரி 10 , 1962 ல் ஹரியானா மாநிலம் ஹிசாரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து. 1981 ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டில் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டில் சண்டிகர் மாநிலத்துக்கு மாறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். பல பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜூலை 7, 2000 நாள் அன்று ஹரியானாவின் இளைய வயது அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட பெருமையைப் பெற்றார். மார்ச் 2001 ஆம் நாளில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 09, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்படும் வரை ஹரியானாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை வகித்தார். பிப்ரவரி 23, 2007 அன்று தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக பிப்ரவரி 22, 2011 வரை தொடர்ந்து இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் இந்திய சட்ட நிறுவனத்தின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக உள்ளார் - இது மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம். குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் முதலிடம் பெற்றதன் மூலம் மற்றொரு சிறப்பைப் பெற்றார். பல்வேறு மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளையும் ஏற்பாடு செய்து கலந்து கொண்டார். அக்டோபர் 05, 2018 முதல் ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் .
மே 24 , 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். மேலும், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக, 12 நவம்பர், 2024 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக உயர்வுபெற்ற நிலையில் பிப்ரவரி 09 , 2027 அன்று ஓய்வு பெற உள்ளார் .








கருத்துகள்