எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு. வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களுக்கு தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூப்ப காந்த் ஜாாயல் பாச்சி அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நவம்பர்.11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ் சுத்தில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்ஐ ஆர் நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் திருவிழா கொண்டடாட்ட மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது மக்களைச் சிரமத்துக்கு உன்ளாக்கும் என்பதால் இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.
அதைக்கேட்ட நீதிபதி சூர்ய காந்த் நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? இது ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை தானே இதில் பல்வேறு பிரச்சனைகன் இருந்தாலும் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலையும் விளக்கத்தையும் கொடுக்க வேண்டும்' எனக் கூறினார்.
மேலும் நீதிபதிகள், நாட்டிலேயே முதல்முறைாாக வாக்காளர் பட்டி யல் தயாரிக்கப்படுவது போல குறை கூற முயல்கிறீர்கள். எங்களுக்கும் கள நிலவரம் தெரியும். ஒட்டுமொத்தமாக அதன் செயல்பாட்டை ஏன் குறை கூறுகிறீர்கள்? ஒருசில குறை பாடுகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுங்கள் தேர்தல் ஆணையம் சரி செய்யும். நீங்கள் மனுவில் குறிப்பிடப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இருந்தால் நாங்களே எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிப்போம் என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி, 'எஸ்ஐ.ஆர் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களைச் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவற்றின் மீதான விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்குகனை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
எனத் தெரிவித்தனர். அதிமுக மனு: முன்னதாக, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள். அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்குரிய பணிகளைத் தொடங்கியுள்ளது.தேசியக் குடியுரிமைச் சட்டத்தின் படி, 1950 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை, இந்திய ஆட்சி நிலத்தில் பிறந்த எவரொருவரும் இந்தியாவின் குடிமகனாக ஏற்றுக் கொள்ளப்படும். பெற்றோர் இந்தியாவின் குடிமகமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காரணம் அது 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களின் ஆட்சி ஆகவே 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்ததின்படி (the citizenship (amendment) act, 2003), 1.071987 - 03.12. 2004 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவரின் பெற்றோரில் ஒருவர் கட்டாயம் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டில் பிறந்தவரின் பெற்றோர் இருவரும் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும் (அல்லது) பெற்றோரில் ஒருவர் இந்தியாவின் குடிமகமாக இருந்தால் மற்றொருவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது. இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 1987, 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்பு என்ற மூன்று குடிமை அடுக்குகள் உள்ளன. குடியுரிமை-வாக்குரிமை இரண்டும் பிரிக்க இயலாத அடிப்படை உரிமைகளாகும். அடையாளம் மற்றும் முகவரி உறுதிப்படுத்தும் பொருட்டு 13 ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டதன்படி பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், பணியாளர் அடையாள அட்டை, வசிப்பிடச் சான்றிதழ், ஓய்வூதிய ஆவணங்கள், ஜாதி அல்லது வன உரிமைச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும். தற்போதைய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் விண்ணப்பதாரர் ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. வாக்காளர் கணக்கீட்டுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பிக் கொடுத்தாலே போதுமானது. ஒருவேளை, 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இல்லை என்றால் தான் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 13 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, 01.07.1987க்கு முன்பு பிறந்து, 2002 ஆம் ஆண்டில் SIRல் இடம் பெறாதவர்கள் தற்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குரிமையை பெற முடியும்.01.07.1987 -02.12.2004க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள், தன்னுடைய அடையாளத்தையும் தனது பெற்றோர்களில் ஒருவரின் அடையாளத்தையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குரிமையை பெற முடியும். அதேபோன்று, 2.12.2004க்குப் பிறகு பிறந்தவர்கள்,தன்னுடைய அடையாளத்தையும், தன்னுடைய பெற்றோர் இவர்களின் அடையாளத்தை கண்டிப்பாக காட்டி வாக்குரிமையை பெற முடியும்.






கருத்துகள்