பிள்ளையார்பட்டி கோவில் பி. க. நக டிரஸ்ட் அறங்காவலர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் கடந்த 600 ஆண்டுகளாக செட்டிநாட்டுப் பகுதியில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை சமஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஜாதியைச் சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியப் பரம்பரையாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த ஸ்கீம் திட்டத்தின் படி, மேற்கண்ட 20 குடும்பத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் வருட அறங்காவலர்களாக விநாயகர் சதுர்த்தி முடிவில் மாறுதலாக நியமிக்கப்படுதல் வேண்டும்.
எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பொறுப்பும் வகித்துள்ளனர். தற்போது எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பொறுப்பை வகிக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நபருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமிக்கும்படி சிலர் இடையூறுகளைச் செய்து வருகின்றனர். இது டிரஸ்ட் சட்டத்துக்கு புறம்பானது. எனவே விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். என WP. (MD) 32235 /2025 ரிட் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பிள்ளையார்பட்டி கோவில் பி.க. நக டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலய அறங்காவலர் நியமனத்தில் டரஸ்ட் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார்.
அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் இந்தக் கோவில் மட்டும்தான் முறையாக செயல்படுவதாக நினைத்தேன். இங்கும் இப்படியெல்லாம் நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். விசாரணை முடிவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் நவம்பர் 18- ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்
மருதங்குடி எனும் இராஜநாராயணபுரம் குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலான பின்னர் பிள்ளையார்பட்டியான தேசி விநாயகர் மருதீசர் கோவில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர் மற்றும் பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளில் அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோவில்களை அமைத்த பெருமை முற்காலப் பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த குடைவரைக் கோவில் என்பதை அறியலாம். பொ.ஊ. 4 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை மலைக் குகையில் குடவரையாக செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலைகள் உருவங்கள் இக் கோவிலில் அமைந்துள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராஜ நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் திருத்தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறியலாம்
இந்தக் கோவில் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புலம்பெயர்ந்து பாண்டிய நாட்டில் 93 கிராமங்களில் குடியமர்ந்த சோழநாட்டு மகுட வைசியர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு பாண்டிய மன்னர் சாசனம் செய்து கொடுத்த பின் நான்காம் திருப்பணி முதல் அவர்கள் வசமானது இருந்த போதும் மன்னருக்கே முதல் மரியாதை இரண்டாம் மரியாதை நகரத்தாருக்கு என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கடந்த முப்பதாண்டு காலம்ஸமிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பு இங்கு கூட்டம் அதிகம் வராத காலத்தில் இருந்த நிலை தற்போது மாறிவிட்டது இந்த ஸ்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற திருநாமமே உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் எனப் பொருள்.சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை நோக்கி காணப்படுகிறது. குகைக்கோயிலில், மருதீசரான சிவன் லிங்கம் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி கல்வெட்டுக்களில் எழுதப்ப்ட இக்கோவில், பொ.ஊ. 1291 மற்றும் 1238 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததெனலாம். அது குறித்த கல்வெட்டு ஒன்னு கிழக்கு பக்கத்துக் கதவினை ஒட்டி இருந்ததை நகரத்தார் மன்னர் கல்வெட்டு அப்புறப் படுத்தியதை கடந்த நாற்பது ஆண்டு காலமாக யாமறிவோம். கோவில் கட்டிய மன்னர் இவர்களுக்கு வழங்கிய அறப்பணி என்பது மறைக்கப்பட்டு இவர்கள் கட்டிய கோவில் போலவே வழிநடத்தும் நிலை அடுத்த தலைமுறை அறியாத தகவல்.






















கருத்துகள்