பாராளுமன்ற ராஜ்யசபா தலைவர் 21 நவம்பர் 2025 ஆம் தேதி முதல் துணைத் தலைவர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளார்.
புதிய குழுவில் டாக்டர் தினேஷ் ஷர்மா, புவனேஸ்வர் கலிதா, எஸ். பாங்னான் கொன்யாக், ரஜனி அசோக்ராவ் பாட்டீல், டாக்டர் சஸ்மித் பத்ரா, டாக்டர் எம். தம்பிதுரை மற்றும் திருச்சி சிவா ஆகியோர் அடங்குவர். மாநிலங்களவைத் துணைத் தலைவர் என்பவர் மாநிலங்களவையின் தலைவர் (இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்) இல்லாத நிலையில் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இந்தியாவில் மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.தற்போதைய துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவி ஆகஸ்ட் 9, 2018 அணனறு மாநிலங்களவைத் தலைவர் (குடியரசுத் துணைத்தலைவர்) இல்லாதபோது அவைக்குத் தலைமை தாங்குவார்.




கருத்துகள்