பீஹார் சட்டமன்றத் தேர்தல் 2025 ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பரிதாபமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 19 இடங்களைப் பெற்ற கட்சி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் முன்னேற்றம் எதுவும் இல்லை காரணம் அதன் அகில இந்தியத் தலைமை மல்லிகர்ஜூன கார்கே. தன்னை ஒரு காமராஜர் போலவே நினைக்கும் நிலையில் தனது ஜாதி சார்ந்த நபர்களை மட்டுமே வளர்க்க நினைத்து மாநிலத் தலைவராக மாற்றம் செய்த பின்னர் கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆகி தற்போது காணவில்லை. இது தற்செயலான தோல்வி அல்ல; கட்சியின் அடிப்படைப் பலவீனங்களின் வெளிப்பாடு. தலைமை இல்லாமை, உத்தி இழப்பு, உள்ளார்ந்த பிளவு, ஜாதி அரசியலில் பின்தங்கிய தன்மை, இவையே காங்கிரஸின் பீஹார் மாநிலத்தில் தோல்விக்கான முக்கியக் காரணங்கள்.
முதலாவதாக, பீஹாரில் காங்கிரஸுக்கு ஒரு நல்ல தலைவர் முகம் இல்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேசிய அளவில் பிரசாரம் செய்தாலும், முந்தைய வசீகரமில்லை உள்ளூர் தலைவர்களிடம் செல்வாக்கும் இல்லை. மாநிலத் தலைவர் மாதவ் ஆனந்த் அல்லது ஷகீல் அகமது போன்றோர், யாதவ் அல்லது முஸ்லிம் வாக்காளர்களிடம் கூட ஒரு ஈர்ப்பு இல்லை. 2020 ஆம் ஆண்டில் தேஜஸ்வி யாதவின் இளைஞர் உருவத்துக்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் மங்கிப்போனார்கள்; இப்போதும் அதே நிலை தான். கட்சி, தனது பாரம்பரியத் தலைவர்களான ஜெகதீஷ் திவாரி, சத்யேந்திர சிங் போன்றோரை முன்னிறுத்தவில்லை. மாறாக, டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, உள்ளூர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறியது. இது, வாக்காளர்களிடம் "காங்கிரஸ் யாருக்காக?" என்ற கேள்வியை எழுப்பியது.
இரண்டாவதாக, மஹாகூட்டணியில் (எம்ஜிபி) காங்கிரஸ் ஒரு ஜூனியர் பார்ட்னராக மட்டுமே செயல்பட்டது. ஆர்ஜேடி (தேஜஸ்வி) மற்றும் இடதுசாரிகள் ஆகியோரின் நிழலில் தனது அடையாளத்தை இழந்தது. 2020 ஆம் ஆண்டில்"மகாகட்பந்தன்" என்ற பெயரில் ஒன்றுபட்டாலும், வாக்கு இடமாற்றம் (vote transfer) சரியாக நடக்கவில்லை. இப்போதும் அதே தவறு. காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் வாக்குகளை மட்டுமே நம்பியது; ஆனால், முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆர்ஜேடிக்கு நகர்ந்தனர். ஓபிசி, பட்டியல் சமூகம், ஈபிசி வாக்குகளில் காங்கிரஸுக்கு பங்கு இல்லை. பிரசாரத்தில் ராகுல் காந்தியின் "நியாய்" திட்டம் பேசப்பட்டாலும், பீஹாரின் உள்ளூர் பிரச்சினைகளான வேலையின்மை, குடியேற்றம், வெள்ளம் ஆகியவற்றுக்கு உறுதியான தீர்வு இல்லை. "பெண்களுக்கு ரூபாய்.2,500" என்ற ஆர்ஜேடி வாக்குறுதிக்கு முன், காங்கிரஸின் "மகாலட்சுமி" திட்டம் மங்கலாகத் தான் தோன்றியது.
மூன்றாவதாக, பீஹார் அரசியல் ஜாதி அடிப்படையில் இயங்குகிறது. என்.டி.ஏ. ஓபிசி (குர்மி, கோயரி), ஈபிசி, பட்டியல்(நோனியா, பாஸ்வான்), உயர்ஜாதி ஆகியவற்றை ஒருங்கிணைத்தது. ஆர்ஜேடி யாதவ்-முஸ்லிம் கூட்டணியை வைத்திருந்தது. காங்கிரஸுக்கு? ஒரு ஜாதி அடித்தளமும் இல்லை. பாரம்பரியமாக பிராமணர், ராஜ்புத், பூமிகார் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தன; ஆனால், அவை இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு மாறிவிட்டன. கட்சி, புதிய சமூகப் பொறியியல் (social engineering) பரிசோதனை செய்யவில்லை. உதாரணமாக, மல்லாஹ், நிஷாத் போன்ற மீனவ சமூகங்களை இணைக்க முயலவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணி இருந்தாலும், பட்டியல் ஜாதி வாக்குகள் சிபிஎம்-க்கு சென்றன. காங்கிரஸ் கட்சி, ஜாதி அரசியலில் ஒரு "பொதுவான" கட்சியாக மட்டும் தோன்றியது – இது அக் கட்சிக்கு பீஹாரில் கொடுக்கப்பட்ட மரண தண்டனை.
நான்காவதாக, பீஹார் மாநில காங்கிரஸ் கட்சியில் உள் குழுக்கள் பிரச்சினை. ஒரு பிரிவு ராகுல் காந்திக்கு விசுவாசம்; மற்றொன்று கார்கே ஆதரவு மாநிலத் தலைவர்களுக்கு ஆதரவு. தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொகுதி வழங்கலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆர்ஜேடி ஆதரவாளர்களால் நேரடியாகவே எதிர்க்கப்பட்டனர். கட்சியின் அமைப்பு பலவீனம்; பூத் நிலை ஏஜன்ட் ஊழியர்கள் இல்லை. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பீஹாரில் 3 இடங்களை மட்டும் வென்ற கட்சி, சட்டமன்றத் தேர்தலில் எந்த முன்னேற்றம் காட்டவில்லை. பணம், தொண்டர்கள், பிரசார இயந்திரம் – எதிலும் என்.டி.ஏ.வுடன் போட்டியிட முடியவில்லை.
இறுதியாக, காங்கிரஸ் கட்சி பீஹாரை தேசிய அரசியலின் பகுதியாக மட்டும் பார்க்கிறது. "பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற ஒரே கோஷம். ஆனால், வாக்காளர்களுக்கு உள்ளூர் தலைமை, உள்ளூர் தீர்வு வேண்டும். நிதீஷ் குமார் "பீஹார் முதலில்" என்றார்; தேஜஸ்வி யாதவ் "வேலை முதலில்" என்றார். காங்கிரஸ் கட்சி? "நியாய்" என்றது – ஆனால், அது பீஹாரின் மண்ணில் வேரூன்றவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பீஹார் தோல்வி ஒரு எச்சரிக்கை மணி. நேரு குடும்பம் என்ற பிம்பம் உடைந்து விட்டது, கட்சி நல்ல நிர்வாகிகளை மாற்றம் செய்யாவிட்டால், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதே நிலை தான் வந்துவிடும். உறுதியான உள்ளூர் தலைமையை உருவாக்க வேண்டும், ஜாதி சமன்பாட்டில் பங்கு பெற வேண்டும், அமைப்பை வலுப்படுத்த வேண்டும், உள்ளூர் பிரச்சினைகளுக்கு உள்ளூர் தீர்வு காண வைக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் கட்சி ஒரு அருங்காட்சியகக் கட்சியாக மட்டுமே திகழும் – வரலாற்றில் மட்டும் வாழும், வாக்குச்சாவடியில் காணாமல் இறந்து போகும். காங்கிரஸ் கட்சி தன்னை மீட்டெடுக்க இனி வரும் மாநிலத் தேர்தலில் தனியாகவே களம் காண வேண்டும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளில் டெபாசிட் இழந்து தோற்றாலும் பரவாயில்லை, உழைக்கும் எண்ணமும், உழைப்பின் முக்கியத்துவமும் புரியும், கட்சி சிறிதளவு உயிர் பெறும். "சோத்துக்குத்தானே அலையறே?
இந்தா சாப்பிடு சோறு"
என்று இலவசம் என்று தரும் இலவச சோறு திட்டமும் உழைப்பாளர்களை அடிமையாக்கும் திட்டமே. மக்கள் விரும்புவது இலவசங்களும், ஆட்சியாளர்கள் நடத்தும் கவர்ச்சி நிகழ்ச்சிகளோ அல்ல, "சோத்துக்குத்தானே அலையறே?
இந்தா சாப்பிடு சோறு சாப்பிடு "
என இலவசம் என்று தரும் இலவசச் சோறு திட்டம் உழைப்பாளர்களை அடிமையாக்கும் திட்டமே.
அவர்களுக்குத் தேவை இலவச சோறு அல்ல. உழைத்துச் சாப்பிட நிரந்தர வேலை.
உழைக்கவே முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் திட்டமென்றால் நல்லது.
75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி அதன் தொண்டர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்க வில்லை.
மீனை உணவாக தர வேண்டாம். மக்கள் விருப்பம் இலவசமாக கல்வி, மருத்துவம், ஊழலற்ற வேலைவாய்ப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட பல இது இப்போது உள்ள அரசியல் வியாபாரிகள் நடத்தப்போவது இல்லை,சிலப்பதிகாரக் கூற்றின் படி அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும், அறம் (தர்மம்) அழியின் உலகம் அழியும், அதைத் தாங்குவோர் அரசர்க்கு அரசு; அநீதி ஆளும் அரசு அழியும்,
விதுரனின் நீதி இது நியமம் உள்ளது.
















கருத்துகள்