பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் நைட்டிக்குள் மறைத்த போது பிடிபட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர். சிக்காமல் இருக்க ரூபாய்.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம்புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய உரிய சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பித்தார். அப்போது விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய்.20 ஆயிரம் செலவாகும் என லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன்,
கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியிடம் பணம் தருகிறேன் எனக் கூறிவிட்டு, நேராக திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துரையில் புகார் தெரிவித்ததையடுத்து முத்துலட்சிமியை பணம் பெற்ற கையுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கிருஷ்ணனிடம் அவய் கொண்டு வந்த பணத்தை பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.20 ஆயிரமாக அரசு சாட்சிகள் முன்னிலையில் பணத்தைக் கொடுத்தனுப்பினர்.
அவர் நேற்று காலை பல்லடத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி வீட்டிற்குச் சென்று பணத்தை சாட்சி முன்னிலையில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன், ஆய்வாளர் சசிகலா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் முத்துலட்சுமியை பணம் பெற்ற கையுடன் பிடிக்க முயன்றனர். ஆனால்
அப்போது முத்துலட்சுமி அவர்களிடம் சிக்காமல் இருக்க ரூபாய்.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார். இருப்பினும் பெண் ஆய்வாளர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசரணைக்குப் பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பினர் இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் இன்னும் பத்து நாட்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்க உதவும்.








கருத்துகள்