தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து இயக்குனரைச் சிக்க வைத்த இருவரை கைது செய்த உள்ளூர் காவல்துறை
திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நள்ளிரவில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து அலுவலரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்க வைக்க முயன்ற நபர்களில் இருவர் கைது, உயர் அலுவலர்கள் வரையிலான நெட்ஒர்க் குறித்து அலுவல் சார்ந்த கள் விசாரணை நடத்துகின்றனர்.
திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறையின் துணை இயக்குனராக சரவண பாபு பணியாற்றுகிறார். அவரது பணி அலுவலகத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது இருக்கைக்கு எதிரில் உள்ள அலமாரியில் இருந்து ரூபாய்.2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பணத்தை 6 கவர்களிலிருந்து எடுத்துச் சென்றனர்.
கணக்கில் காட்டப்படாத பணம் என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதா துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு முன்தினம் 17 ஆம் தேதி, தீயணைப்புத் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள வீட்டின் முன் அமைத்துள்ள கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்து ஆய்வு செய்த போது 17 ஆம் தேதி அதிகாலை 12:10 மணிக்கு கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தைக் கொண்டு வந்து அலுவலகத்தில் மறைத்து வைத்து விட்டுச் செல்வது உறுதியானது.
இது குறித்து தீயணைப்புத் துறையின் துணை இயக்குனர் சரவணபாபு காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் அளித்தார்.
பெருமாள்புரம் காவல் நிலையத்தில் விசாரித்தனர். இவரைச் சிக்க வைக்க ஒரு
பெரிய நெட்ஒர்க் இதில் தொடர்புடையதாகத் தெரிய வந்தது, தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஆனந்த் (வயது 30), அவரது அக்காளின் மகன் முத்து சுடலை (வயது 29) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்தத் திட்டத்தின் பின்னணியில் தீயணைப்புத் துறை உயர் அலுவலர்கள், மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணி செய்யும் நபர்களும் உள்ளனர் எனத் தெரிய வந்த நிலையில்,
வழக்கை விசாரிக்கும் ஒரு விசாரணை அலுவலர் கூறுகையில், 2021 ஆம் ஆண்டில் சரவண பாபு நாகர்கோவிலில் தீயணைப்புந்துறை அலுவலராகப் பணியாற்றும் போது, இரண்டு பெரிய நிறுவனங்கள் தீயணைப்பு துறையின் தடையில்லாச் சான்றினை (NOC) போலியாக வைத்திருந்ததைக் கண்டுபிடித்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு போலியான தீயணைப்புத்துறையின் தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கிய சென்னை தீயணைப்புத்துறையின் சீறுடைப்பணியாளர் அப்போது கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு துணை இயக்குனராகப் பணி உயர்வு பெற்ற சரவண பாபுவிற்கு எதிராக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒரு குழுவினராகச் சேர்ந்து கொண்டு நிமிர்ந்து நில் திரைப்படக் கதைபோல அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். இந்தக் குழுவில் தீயணைப்பு துறையின் தற்போதைய சென்னை உயரலுவலர் முதல் பணியளர்கள் வரை உள்ளனர். இவர்களுடன் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பு உள்ளதெனவும் இயக்குனர்
சரவண பாபு அலுவலகத்தில் அதிகாலையில் பணத்தை வைத்துச் சென்ற நபர் இன்னும் கைதாகவில்லை. இதே உயர் அலுவலர்களின் கும்பலால் மேலும் பல தீயணைப்புத்துறை அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் போலியான புகார்களில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நெட்ஒர்க் முழுவதும் விசாரித்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்கிறார். ஆனால் இந்த விசாரணை மாற்று விசாரணை முகமை மூலம் நடைபெற வேண்டும் என்பதே பலரும் கேட்கும் கோரிக்கையாகும்.
நடந்த நிகழ்வு என்ன:- இது கடந்த 18 ஆம் தேதி நிகழ்வு :- திருநெல்வேலி
தீயணைப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: ரூபாய்.2.61 லட்சம் பணம் பறிமுதல்!
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கட்டடங்களில் அவசரகால தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின்பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரே என்ஜிஓ காலனி பகுதியில் தீயணைப்புத் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறையின் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநராக சரவண பாபு பணியாற்றி வருகிறார்.
இந்த தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை கட்டடங்கள் உள்ளிட்டவைகளுக்கு அவசர கால தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து தடையில்லாச் சான்று வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கடிதங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதில் தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் சரவண பாபு அறையில் நடந்த சோதனையின் போது அங்கிருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், அலுவலகத்தில் பணியாற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புப் பணி வீரர் செந்தில் என்பவரின் மேஜையில் இருந்து 41 ஆயிரம் ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிற்பகல் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி சோதனை 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் மற்றும் அலுவலகத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.


கருத்துகள்