கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி வழக்குப் பதிவு. ரூபாய்.1 கோடி தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
கோயமுத்தூர் கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூபாய்.1கோடி மதிப்புள்ள தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர் மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர்.
கோயமுத்தூர் சிவானந்தாகாலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58), கட்டுமானத் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வீட்டிலிருந்த போது அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் வந்தவர்கள் சோமசுந்தரத்திடம், நீங்கள் நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் தங்கம் வாங்கி மோசடி செய்துள்ளீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அவரை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று அங்கு மிரட்டி நகையை வாங்கினர் பின்னர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் சோமசுந்தரத்திடம் விசாரணை நடத்திய போது அவர், தனக்கு நகை வியாபாரி முத்துக்குமார் என்பவர் யாரென்றே தெரியாது. அப்படி இருக்க நான் அவரிடம் எப்படி நகையை வாங்கி இருக்கமுடியும் என்று கூறியதாகத் தெரிகிறது.
அதற்கு காவலர்கள், நீங்கள் தான் நகையை வாங்கி உள்ளீர்கள். எனவே அந்த நகையை இப்போது திருப்பி கொடுக்க வில்லை என்றால் கைது செய்து, சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் அவர் தனது உதவியாளர் மூலம் ரூபாய்.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கி அதை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்களிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் சோமசுந்தரத்தை திரும்ப அனுப்பி வைத்ததாகவும். இப்படி சம்பந்தமே இல்லாத ஒரு வழக்குத் தொடர்பாக தன்னை மிரட்டி நகையைப் பறித்து மிரட்டிய காவல்துறை செல்வராஜ் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் மாநகரக் காவல்துறை குற்றப்பிரிவிடம் சோமசுந்தரம் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் CRL OP மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சோமசுந்தரம் கொடுத்த புகார் மனுவினை விசாரணை நடத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில்
அதை தொடர்ந்து கோயமுத்தூர் மாநகரக் குற்றப்பிரிவு காவல்துறை யினர் நகை வியாபாரி முத்துக்குமார், அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதான விசாரணை உண்மையாக நடக்கும் பட்சத்தில் விரைவில் அவர்கள் கைதாகலாம் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் செல்வராஜ் தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சம்பவம்: சோமசுந்தரம் என்பவருக்கு எதிராக ஒரு பொய்யான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, அவரை கைது செய்வதாக மிரட்டி, அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள்