எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு
கணக்கெடுப்புப் படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் வரும், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் படி கணக்கெடுப்பு பணி நடப்பதில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இது, 95.6 சதவீதம் ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபா படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி வாக்காளர்களிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, 40.4 சதவீதம். வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டுப் படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதை கிளிக் செய்து, மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், கணக்கெடுப்புப் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் நடந்து வரும், 'எஸ்.ஐ.ஆர்.,' வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி குறித்து, தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலராகள் இன்று கள ஆய்வு செய்தனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த துணை இயக்குனர்கள் பவன், தேவன்ஷ் திவாரி ஆகியோர், இன்று முதல், 26 ஆம் தேதி வரை, எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பான, ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சென்னையில் கள ஆய்வும் செய்கின்றனர்.
மாவட்ட அளவில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக, கணக்கெடுப்புப் படிவங்கள் வினியோகம் மற்றும் டிஜிட்டல் பதிவேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, செல்ல உள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மதுசூததன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று, எஸ்.ஐ.ஆர்., பணியை ஆய்வு செய்ய உள்ளார்.ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் வாக்காளர்கள் இடம் மாறி இருந்தால் அவர்களின் படிவம் ஏற்கப்படும். வேறு பேரவைத் தொகுதிக்கு வாக்காளர் சென்றிருந்தால் அவர்கள் பழைய இடத்தில் விண்ணப்பிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், எஸ்.ஐ.ஆர். படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல் சரியாக இருந்தால், எந்தப் படிவமும் நிராகரிக்கப்படாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்





கருத்துகள்