மலபார் போர் பயிற்சிக்காக குவாமுக்குச் சென்றது ஐஎன்எஸ் சஹ்யாத்ரி போர்க்கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் நடைபெறும் பலதரப்பு போர்ப் பயிற்சியான மலபார் பயிற்சி -2025-ல் பங்கேற்கிறது.
இப்பயிற்சியில் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி பங்கேற்பது, நீடித்த ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சஹ்யாத்ரி ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பல் பல்வேறு இருதரப்பு பயற்சிகளிலும் பலதரப்பு பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.
மலபார்-2025 பயிற்சியின் துறைமுக கட்டத்தில் செயல்பாட்டு தயார் நிலைப் பயிற்சிகள், பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். துறைமுக கட்டத்தைத் தொடர்ந்து, கடல் சார் கட்டம் நடைபெறும். இதில் கப்பல்களும் விமானங்களும் கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கும். கூட்டு கடற்படை நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும்.

W61F.jpg)
கருத்துகள்