கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் வீடு, மகள் இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திய நிலையில்,
தற்போது அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லத்திலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். வத்தலகுண்டு அருகே, தமிழ்நாடு உள்ளாட்சி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை நடத்தினர். மகள் வீட்டிலும் சோதனை நடந்தது.அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரகநாதன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த, கே.சிங்காரக்கோட்டை அருகே, ஒட்டுப்பட்டியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 8,500 பேர் பணி செய்கின்றனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது.இங்கு இன்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் 10 பேர் , சோதனை நடத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா. இவரது கணவர் துவாரக நாதன். குடும்பத்துடன் திண்டுக்கல் இராணி மங்கம்மா காலனி அருகிலுள்ள செவாலியே சிவாஜிகணேசன் நகரில் வசித்து வருகிற நிலையில், இன்று நவம்பர் மாதம்.21 ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் கோயமுத்தூரிருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் ஐந்து பேர் கொண்ட குழு வந்து இந்திராவின் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) அலுவலர்கள் சோதனை..!
குறித்து இன்னும் முழுமையாக தகவல் வரவில்லை.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள், டி. இந்திராவின் தொழில் நிறுவனங்கள்.
விபரம்
ஸ்ரீ ஆலமேலு அம்மன் மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதில் அவர் இயக்குநராக உள்ளார்.
கெய்னப் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உற்பத்தி மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அவர் பட்டியலிடப்பட்டுள்ளார்.
கெய்னப் டெக்னோடெக் லிமிடெட் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம்,இதில் அவர் இயக்குநராவார்.
ரிச்வேர்ல்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
கோன் அக்ரோ ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் ஒரு புதிய நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டதில் அவர் இயக்குநராக உள்ளார்.
திவா எம்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் வர்த்தக நிறுவனத்தில் அவர் இயக்குநராக உள்ளார்.
குடும்பத்துடன் தொடர்புடைய வணிகங்கள்.
இருளப்ப மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இது முதன்மையாக அவரது தந்தை ஐ. பெரியசாமி மற்றும் அவரது சகோதரர் பிரபு தொடர்புடையதாக இருந்தாலும்,இந்த ஜவுளி நிறுவனம் குடும்பத்தின் வணிகப் பிரிவில் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்த ஆலையின் வளாகத்திலிருந்து பிற "காகித நிறுவனங்கள்" செயல்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிற பெயர்கள் குறித்த குறிப்பு: வணிகச்செய்திகளில் சில சமயங்களில் "சுமிதா பெரியசாமி" (ஃபுட் பட்டிஸ்-Food Buddies இன் தலைமை நிர்வாக அலுவலர்) என்ற பெயரைக் காணலாம்.ஆனால் அவர் பொதுவாக "மூன்றாம் தலைமுறை" தொழில்முனைவோராகக் குறிப்பிடப்படுகிறார், மேலும் பொதுப்பதிவுகளில் இந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள அமைச்சரின் மகள் இந்திரா பெரியசாமி என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ. பெரியசாமி சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி வேல்முருகன் முன்பு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில், ‘எங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முகாந்திரம் இல்லாதவை. சொத்துகளை முறையாக கணக்கீடு செய்யாமல் எங்களுக்கு எதிரான வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும்,” என வாதிடப்பட்டது.கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.லஞ்ச ஒழிப்பு தரப்பில், விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையை விளக்கி வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்பி- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.









கருத்துகள்