தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதியில் தவெகவில் இணைகிறார்
மூன்னால் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமைக்கு எதிராக சில வாரங்களுக்கு முன் போர் துவங்கிய கே.ஏ.செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து வெளியேற்றியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார் கோபமடைந்த எடப்பாடி கே.பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை முதலில் பறித்தார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா நடராஜன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்லம் உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுகவிலிருந்தே கே. ஏ.செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி கே பழனிசாமி. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களையும அதிமுகவில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கே. ஏ. செங்கோட்டையன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கே.ஏ.செங்கோட்டையனின் சகோதரி மகனான முன்னாள் டிஜிபி எம்.ரவி, கடந்த வாரம் நடிகர் விஜய்யை இது தொடர்பாக சந்தித்துப் பேசியிருந்தார்.
இதனையடுத்து தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் கே. ஏ.செங்கோட்டை யன்,நடிகர் விஜய் முன்னிலையில் நவம்பர் மாதம் 27- ஆம் தேதி தவெகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியது.25 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசியலில், குறிப்பாக சேரநாடான கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக கட்சி வரலாற்றிலேயே 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி கே பழனிசாமி ஆகிய நான்கு முதல்வர்களுடன பணியாற்றியவர். இருந்த போதும், அதிமுகவில் விசுவாசத்தின் விலாசமாக இருந்த கே. ஏ.செங்கோட்டையன். யாரையும் அதிர்ந்து பேசாத அரசியல்வாதி. இருந்த போதும் எடப்பாடியின் பய உணர்வு மற்றும் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆனாலும் எடப்பாடி குறித்து அவர் தற்போது வரை கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு தீர்க்கமான இரண்டாம் கட்டத் தலைவர் வேறில் பழுத்த பலாவாக அரசியல்வாதி தேவை என்ற நிலையில் மிக அமைதியான அதே நேரத்தில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட கே. ஏ செங்கோட்டையனை விஜயே நேரடியாகப் பேசி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருக்கும் அவர் மிகப்பெரிய அரசியல் கூட்டங்களை நடத்தியுறள்ளார் சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களில் வியூகம் வகுப்பது தலைவர்கள் சுற்றுப்பயணம் உள்ளிட்ட கட்சி வேலைகளைச் செய்தவர். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதரவாளர்களுடன் இணைகிறார்
தனிப்பட்ட முறையில் ஒரு வார்த்தை கூட அவர் எடப்பாடி பழனிச்சமி பற்றிப் பேசியதில்லை. இந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு செங்கோட்டையின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைய வெளிப்படையாகவே பேசி வந்த அதிமுகவின் மருது அழகுராஜ், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் உள்ளிட்ட பலரை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கவில்வை ஆனால் நடிகர் விஜயே கே. ஏ.செங்கோட்டையனை அணுகி கட்சியில் சேர நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
அதற்கு என்ன காரணம் என்பது தான் தற்போதைய அரசியலில் பேசுபொருளாக மாறியது. உண்மையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பழுத்த அரசியல்வாதி தேவை என்ற நிலையில் மிக அமைதியான அதே நேரத்தில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்? விஜய் உடன் கைகோர்ப்பது உறுதி? பரபர
பண்ருட்டி ராமச்சந்திரன்
விஜய்க்கு கூட்டம் கூடினாலும் அமைப்பு ரீதியாக அதனை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிக்கல் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதும் தான் செங்கோட்டையனுக்கு தரப்பட்டிருக்கும் பொறுப்பு. அதிமுகவில் மிக வலிமையான தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அங்கு சென்று கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் அரசியல் வியூகங்கள் வகுக்கவும் உதவினார். தற்போது அதே பாணியில் அதிமுகவில் இருந்து மிக மூத்த பழுத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை தட்டி தூக்கி இருக்கிறார் விஜய் என்கின்றனர். அதன் பின் பல கட்சிகள் கூடடணி நோக்கி தவெக விசில் சப்தத்துடன் நகரும். இனி விஜயுடன் கூட்டணியாக அமமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், ஓ. பன்னீர் செல்வம் துவங்கும் புதிய கட்சி, மக்கள்பாதை உள்ளிட்ட ஏழு கடசிகள் கூடடணி மூலம் இணையலாம்.






கருத்துகள்