முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் செட்டியார், நவம்பர் 17, 2025 இன்று 72வது வயதில் காலமானார்.
அவர் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றியுள்ளார், மேலும் அவரது தலைமையில் குழுமம் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. அவரது தலைமைப் பதவியில் இருந்து விலகிய பிறகு, குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பைத் தனது உறவினர் எம்.எம். முருகப்பனுக்குக் கொடுத்தார்.
முக்கிய பொறுப்புகள்: முருகப்பா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவர்.
பதவி விலகல்: 2018 பிப்ரவரியில் தலைவர் பதவியில் இருந்து விலகி, எம்.எம். முருகப்பனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை பூர்வீகமாகக் கொண்டவருக்கு லலிதா என்ற மனைவியும், அருண் மற்றும் நாராயணன் என்ற இரண்டு மகன்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அருணாசலம் வெள்ளையன் பிறப்பு 9 ஜனவரி 1953 ஆம் ஆண்டு ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் சென்னையில் உள்ள முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவராவார். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு, அவர் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார், அந்த இடத்தை தனது சகோதரர் எம்.எம். முருகப்பனுக்கு விட்டுக்கொடுத்தார். சைக்கிள் உற்பத்தி துவங்கி சகல துறைகளில் கால் பதித்த நிறுவனம் என்ற போதும் மிகவும் எளிமை நேர்மை கொண்டவர் 1992 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த ஒரு மகத்தான நபர் அவரது மறைவுக்கு பலரும் ஆழந்த இரங்கல் தெரிவித்துளளனர், ஓம் சாந்தி






கருத்துகள்