இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
தெரு நாய்கள் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்த நிலையில் தான் தற்போது அம்பத்தூரில் நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் ஒருவரை விலங்கு நல ஆர்வலர் ஒருவர் (பெண்) மரியாதைக் குறைவாக, கடுமையாக பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்தது. தெருவில் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் தொல்லை குறித்த வழக்கில் சமீபத்திய உச்சநீதி மன்ற உத்தரவில், தெரு நாய்களுக்கு சாலைகளில் உணவிடக் கூடாது என்றும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு உணவிடுவதற்கு தனியாக இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் தெருக்களில் நாய்களுக்கு உணவிடக்கூடாது. அப்படி உணவிடுவது குற்றம் என்றும், எந்த ஆர்வலரும், அமைப்பும் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகளை எதிர்ப்பதோ, அவர்களின் பணியில் இடையூறு செய்வதோ கூடாது என்றும் அப்படி செய்தால் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆகையினால், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்கள் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நீதிமன்ற உத்தரவை மதிப்பதோடு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நாய்களும் பேணிகாக்கப்படும் என்பதை உணர்ந்து நாய் ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இல்லையேல் சட்ட ரீதியாக அவர்களின் மீது நடவடிக்கை பாயும் என்று உணரவேண்டும்.தெரு நாய்களை அழிப்பது என்பது நோக்கமல்ல. சிவகங்கை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஒவ்வொரு தாலுகாவிலும் வட்டாட்சியர் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலர்களைக் கடித்தால் மட்டுமே தான் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் ஒழிக்கப்படும். நகராட்சி நிர்வாகத்திறகு மாவட்ட நிர்வாகம் எழுதிய கடிதம் சிறப்பு மேலும் பீடடா உள்ளிட்ட நாய் ஆர்வலர்கள் ஒவ்வொருவரிடமும் பத்து தெருநாய்களை பிடித்து ஒபபடைக்க உத்தரவிடடால் இதபோல எங்கும் பிரச்சனைகள் வராதுசிவகங்கையில், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தேர்தல் பிரிவு தாசில்தாரை தெருநாய்கள் விரட்டி விரட்டிக் கடித்ததில், பலத்த காயமடைந்தவர் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரடியாக கள ஆய்வு செய்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்தத் தவறிய நகராட்சி ஆணையர், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒரு வாரம் முன் காலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திடலில், தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ், வயது 55, என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டார். பின், இரண்டு சக்கர வாகனத்தில் திருப்புத்துார் சாலையில் சென்ற போது, சில நாய்கள் அவரை விரட்டி விரட்டிக் கடித்ததில், பலத்த காயமடைந்தவர் மாவட்ட ஆட்சியர் பொற்கொடிக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நாய்கடி சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த ஆட்சியர், திருப்புத்துார் சாலையில் திரியும் நாய்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் அசோக்குமாரை, மொபைல் போனில் அழைத்த ஆட்சியரின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த ஆட்சியர், நேரடியாக நகராட்சி அலுவலகம் சென்று, அங்கிருந்த அலுவலர்களிடம் கடுமையான முறையில் கடிந்து கொண்டார். மேலும், நாய்களுக்கு தடுப்பூசி போடத் தவறிய நகராட்சி ஆணையர் அசோக்குமார், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்தகோபால் ஆகியோர் மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினார்.
நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில், ''நகரில் இருக்கும் 200 நாய்களில், 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். திருப்புத்துார் சாலையில் தாசில்தாரைக் கடித்த இரண்டு நாய்களைப் பிடித்து நேற்று உடனே ஊசி செலுத்தி விட்டோம். விரைவில் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் சாமானிய மக்களுக்கு நாய் கடித்த போது கண்டும் காணாமல் போன நிர்வாகம் தாசில்தாரைக் கடித்த காரணமாகத் தீர்வு வருகிறது, பல ஊர் நாய் கடி சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் உள்ளது, இதன் பின்னராவது தீர்வு வந்தால் சரி தெரு நாய்களின் தொல்லையாலும், வெறி நாய்க்கடியாலும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பாதித்த போதெல்லாம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், தங்கள் அரசு பணி அலுவலர் பாதிக்கப்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கும் நிலை , சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்களிடம் விளக்கம் கேட்கிறார்கள், என்று சிவகங்கை மக்கள் பேசுகிறார்கள். ஊழல் அதிகம் உள்ள மாவட்டமாக சிவகங்கை கடந்த மூன்றாண்டுகளாககிறது வேதனையில் பல மக்கள் பேசும் கருத்து இது.










கருத்துகள்