மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
தலைமைக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் மாம்பழச் சின்னம் உறுதியானது. பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான்!" இந்தியத் தேர்தல் ஆணையம் மருத்துவர் ச.ராமதாசுக்கு எழுதிய கடிதம். கட்சித்தலைவர் பதவி குறித்த உங்களது முரண்பாடுகளைத் தீர்க்க நீதிமன்றத்தை அணுகும்படி மருத்துவர் ச.ராமதாஸ் சார்ந்த சிறிய அணிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
கட்சியின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவர் அண்புமணி ராமதாஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். "நமக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டார்கள். என்னை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார்கள். மாம்பழம் சின்னம் நமக்கு ஒதுக்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் 'Aபார்ம்' மற்றும் ' Bபார்ம்' கையெழுத்து போடும் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள்.
நீதிமன்றம் அல்லது எங்கு சென்றாலும் எதுவும் ஆகப் போவது கிடையாது. அதைப் பற்றியும் நான் பேசவும் வேண்டாம்" என்று உறுதியளித்தார். மேலும், கட்சியின் நிறுவனர் அய்யா ராமதாஸ் அவர்களைப் பற்றி மாற்றுத் தரப்பினர் பேசும் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அங்கு இருப்பவர்கள் தினமும் அய்யா (மருத்துவர் ராமதாஸ்)பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுயநலத்திற்காக, திமுகவின் கைக்கூலிகள் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பேச வேண்டாம், நம் வேலைகளைச் செய்வோம்" என்று கூறினார். வரவிருக்கும் தேர்தல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகளிருக்கு முக்கியத்துவம் மற்றும் போராட்ட ஆயத்தங்கள்
வரவிருக்கும் தேர்தலில் கட்சிப் பணிகளில் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசினார். "கட்சியில் வந்திருக்கின்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் தான் ஹீரோ" என்று பாராட்டினார். குறிப்பாக, மகளிர் பங்களிப்பு குறித்துப் பேசியபோது, "நூறு தொகுதிகளிலும் மகளிர்களையும் தொகுதிப் பொறுப்பாளர்களாகப் போட உள்ளேன். பெண்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும். அவர்களைப் பத்திரமாகத் தங்க வைத்துப் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அவர்கள், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக, அன்புமணியின் தங்கைகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், மாவட்டச் செயலாளர்கள் அதற்கான தேதிகளைச் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் மகளிர் வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வரவிருக்கும் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விதமாக, ஒவ்வொரு வருவாய் மாவட்டமாகத் தான் வர இருப்பதாகவும், அதற்காகத் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுக்க வேண்டும் என்றும், திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
இறுதியாக, அன்புமணி ராமதாஸ், "நிம்மதியாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன், தைரியமாக இருக்கிறேன், தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறி, கட்சிப் பயணத்தின் மீதான தனது உறுதியை நிர்வாகிகளுக்கு உணர்த்தினார் நீணட காலமாக பதவியை அனுபவித்து உண்மைத் தொணடர்களை தனது கோஷ்டி சேர்த்த ஜி. கே மணி இல்லாத நிலை வந்தது! வழக்கறிஞர் கே பாலுவின் முயற்சி மற்றும் நடவடிக்கைக்கு, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொடர்கிறார், அவரது பதவி காலம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி செய்துள்ளது! திமுகவை அகற்ற உள்ள கூடடணியில் பாமக இருக்கும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.










கருத்துகள்