விமானத்தில் கோயமுத்தூர் வந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிராந்திய அமைப்புச் செயலாளர், கே. ஏ. செங்கோட்டையனுக்கு 4 மணிநேரம் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்த தவெக கட்சியினர்.
பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,, "எம்ஜிஆர் என்னை அடையாளம் காட்டினார். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற நாளைய முதல்வர் விஜய் 2026 ல் முதல்வராக அமர்வார்.
வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மாற்று சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். புனித ஆட்சியை தமிழகத்தில் இடம் பெற வைக்க விஜய் துணிந்து புறப்பட்டிருக்கிறார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன்.
இரண்டு ஊழல் ஆட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.4 மணி நேரம் காத்திருந்து எளிய தொண்டனாக என்னை கோயமுத்தூரில் வரவேற்றிருக்கிறார்கள். 9 முறை சட்டமன்றப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன்.
வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இரண்டு ஆட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.4 மணி நேரம் காத்திருந்து எளிய தொண்டனாக என்
பின்னால் மக்கள் இருக்கிறார்கள்". என அவர் குறிப்பிட்டார்.தவெகவில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் நேற்று இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிராந்திய அமைப்புச் செயளாளர் உள்ளிட்ட இரண்டு பதவிகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் தன் சட்டமன்ற உறுப்பினர், பதவியை ராஜினாமா செய்தார், தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜயை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் நேற்று காலை செங்கோட்டையன் வந்தார்.
பின்னர், ஆதரவாளர் களுடன் விஜய் முன்னிலையில், த.வெ.க.,வில் முறைப்படி சேர்ந்தார். அவருக்கு சால்வை மற்றும் த.வெ.க., கட்சித் துண்டு அணிவித்து விஜய் வரவேற்றார்.
மேலும், த.வெ.க.,வில், செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டன.
பின், அங்கு கே. ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:
"கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய நிலை வேறு.
அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தினேன்; கெடு விதிக்கவில்லை; பேச்சை துவக்க வேண்டும் என்றேன். கெடு என சொல்ல வைத்தது பழனிசாமி.
கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற முடிவு செய்து, சரியாக காய் நகர்த்தினார். கட்சிக்காக 50 ஆண்டுகளாக உழைத்ததற்கு கிடைத்த பரிசு. மகேஷ் என்பவரின் மாமா, விபத்தில் இறந்து விட்டார். அவர் வீட்டிற்கு சென்று நான் துக்கம் விசாரித்ததற்காக, அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். இது, தற்போதுவரை தமிழகத்தில் நடக்காத நிகழ்வு.
அதன்பின், தெளிவான முடிவெடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளேன். இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான்; ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றன.
ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்கிறேன். நான் தான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் பார்த்துக் கொள்வான்; தண்டித்து விடுவான். எல்லாருக்கும் மேலே இருக்கும் இறைவன் நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறான்.
துாய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர, விஜய் கட்சியை துவக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். குழந்தைகள் கூட, அவருக்கு ஓட்டளிக்கும் படி பெற்றோரைக் கேட்கும் நிலை உள்ளது.
ஜெயலலிதா படம் எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும், மாற்றங்கள் உருவாகின்றன. டில்லியில் இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில், ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பஞ்சாபிலும் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழகத்திலும் புதிய கட்சி ஆட்சிக்கு வரும். த.வெ.க., தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புனிதமான ஆட்சியை வழங்கினர். ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு வேறு; அவர் துாய்மையானவர். ஒரு அரசு நினைத்தால், எப்படி வேண்டுமானாலும் வழக்கை ஜோடிக்க முடியும். தி.மு.க.,வோ, தேசிய கட்சிகளோ, என்னை சந்திக்கவில்லை; அமைச்சர் சேகர்பாபு என்னை சந்திக்கவில்லை.
என் சட்டை பையில் வழக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதா படத்தை மாற்றினால், ஒரே நாளில் மாற்றி விட்டார் என்பீர்கள். ஆனால், யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், த.வெ.க., ஒரு ஜனநாயகக் கட்சி." இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க.,வில் இணைந்த பின், முன் னாள் முதல்வர்கள் டாக்டர் சி. என்.அண்ணாதுரை, டாக்டர்.எம்.ஜி.ஆர்., டாக்டர் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் செங்கோட்டையன் தவெக கட்சி பிரமுகர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். செங்கோட்டையனை வரவேற்று, த.வெ.க., தலைவர் விஜய் கூறியதாவது:, "செங்கோட்டையன் 20 வயது இளைஞராக இருந்த போதே, எம்.ஜி.ஆரை நம்பி, அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதில், எம்.எல்.ஏ., என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பின், தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி, 50 ஆண்டுகளாக ஒரே கட்சியிலிருந்த செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது அரசியல் அனுபவம், களப்பணி ஆகியவை த.வெ.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும். அவருடன் த.வெ.க.,வில் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்; நல்லது மட்டும்தான் நடக்கும். வெற்றி நிச்சயம், ".எனக் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவம்பர் 26 அன்று அவர் ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தவெகவில் இணைந்துள்ளார்.
அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபிசெடடிபாளையம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன்,
முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் இணைகிறார்









































கருத்துகள்