முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கை ஜீவன் குமாரவேல் தொண்டமானையும் நாச்சியார் ஸ்ரீ சீதையையும் திருமண பந்தத்தில் இணைத்து வைத்த எஸ்டேட் தொழில்

இலங்கை ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமானயும் இரா.நாச்சியார் ஸ்ரீ சீதையையும் எஸ்டேட் தொழிலால் இணைத்து வைத்த திருமண விழா.   


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (23.11.2025)  திருமண பந்தத்தில் இணைந்தார்.
, ஜீவன் குமாரவேல் தொண்டமான் இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவருடன் திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார்.






அவருடைய திருமணம் நேற்று (23.11.2025)  திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது மனைவி மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜீவன் தொண்டமானின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை, இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.





இந்தியாவில் திருமண விழாவினைத் தொடர்ந்து இலங்கையில் கொழும்பு மற்றும் கொட்டகலயில் திருமண வரவேற்புகள் நடைபெறவுள்ளன.ஜீவன் தொண்டமான்

நாடாளுமன்ற உறுப்பினராக12. 08. 2020 ஆம் தேதி நுவரெலியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி பதவியில் உள்ளார்

ஜீவன் குமாரவேல் தொண்டமான் 09. 11.1994 (வயது 31) ல் பிறந்த இலங்கைக் குடியுரிமை கொண்டவர் இவரது தாத்தா  காலஞ்சென்ற முன்னால் இலங்கை அமைச்சர் சௌமிய மூர்த்தித் தொண்டைமான் பட்டமங்கவம் அருகில் முத்துராமலிங்கபுரம் புதூரைச் சேர்த்த தஞ்சாவூர் கிளை கள்ளர் வழி மரபு வந்தவர் 


இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி துவங்கும் முன் இவரது குடும்பம் எஸ்டேட் கங்காணி பணி செய்து பின் அந்த் தொழிலாளர் சார்பில் கட்சி துவங்கி நடத்தி இலங்கை அரசியலில் ஒரு இடம்பிடித்தவர் அவரது பேரனும் 








முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்கத் தலைவருமான காலஞ்சென்ற ஆறுமுகத் தொண்டைமான், அவரது மகன் 
ஜீவன் குமாரவேல் தொண்டைமான் தற்போது இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர் பொதுஜன முன்னணி கட்சியைச் சார்ந்தவர் கொழும்பு, கேட்வே ஆரம்பப் பாடசாலை, சென்னை, ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் சின்மயா பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்று இங்கிலாந்து நோர்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 2017 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலண்டனில் சிறிது காலம் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பின்னர், தந்தையின் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்து மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல் காரணமாக இலங்கை திரும்பினார்.



2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தந்தை ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவிற்குப் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, மாவட்டத்திலேயே அதிகம் கூடிய விருப்பு வாக்குகள் (109,155) பெற்று நாடாளுமன்றத்திற்கு 
தேர்வான நிலையில் 12.08.2020 ல் கோத்தபைய ராஜபக்ஷ்வின் இரண்டாவது அமைச்சரவையில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.




அதேபோல் மெட்ராஸ் மாகாணம் இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூரில் 22, பிப்ரவரி மாதம் 1915-ஆம் ஆண்டு நாகப்ப பிள்ளை தங்கம்மாள் தம்பதியரின் நான்கு புதல்வர்களில் மூன்றாவது மகனாக ஆறுமுகம் பிள்ளை பிறந்தார். மூத்தவர் சிவசாமி பிள்ளை. இரண்டாமவர் பெரியசாமி பிள்ளை. இளையவர் ரெங்கசாமி பிள்ளை. இவர்களின் தந்தை நாகப்ப பிள்ளை இளம் வயதிலேயே காலமானார்.

ஏழ்மையும் வறுமையும் வாட்டிய நிலையில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை தன் சகோதரரின் துணையுடன் 1929-ல் தமது 14-வது வயதில் ரஜூலா கப்பலில் மலாயா வந்தார். அவரும் அவரின் சகோதரர்களும் தந்தை காட்டிய வழியில் பொட்டியடி கணக்கப்பிள்ளையாக வெ. வீர. நாகப்ப செட்டியாரின் எஸ்டேட் பணி செய்து பின்னர் தன் சகோதரருடன் சில மளிகைக் கடைகளில் பணியாற்றி  மளிகை வியாபாரம் பினாங்கு சுங்கை ரம்பை (புக்கிட் மெர்டாஜாம்) என்னுமிடத்தில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை. பின்னர் சகோதரர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டனர்.




முன்பே கிட்டங்கி உட்பட பல இடங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் தொழிலில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இவரோடு ரேணா என்று அழைக்கப்பட்ட இவரது இளைய சகோதரர் ரெங்கசாமி பிள்ளையும் மலேசியாவில் முன்னால் இராமநாதபுரம் நாடாளுமன்ற முதல் உறுப்பினர் வெ. வீர. நா.நாகப்ப செட்டியார் மறைந்த பின் திடீர் செல்வந்தராக அடையாளம் காணப்பட்டு பின் உயர்ந்தார்கள். குடிசை வீடு திருப்பத்தூரில் மாளிகையானது 


என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை 1938-ஆம் ஆண்டில் அவரது 23-ஆவது வயதில்  சீதையம்மாளைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன், தங்கவேலு, தங்க நாச்சியார் என மூன்று பிள்ளைகள்.1950-ஆம் ஆண்டுகளில் மலேசியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் மற்றும் செட்டிஆர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்பு தங்கள் வசமிருந்த ரப்பர் தோட்டங்களை விற்றும் மற்றும் தங்கள் பணியாளர்களின் பொறுப்பில் விட்டும் வெளியேறினர்  என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நில தரகுத் தொழிலில் ஈடுபட்டு தோட்டங்களை வாங்கிப் பிரித்து சிறு முதலாளிகளிடம் விற்றார். அத்தொழிலின் வழி பெரும் செல்வந்தராகவும் வளர்ந்தார். மேலும் தோட்டங்களைத் தானே வாங்கி நிர்வகிக்கவும் தொடங்கினார். சுங்கைப்பட்டாணியில் 11.5 ஏக்கர் ரப்பர் தோட்ட நிலத்தை 55 லட்சம் ரிங்கிட் வெள்ளிக்கு வாங்கினார். யுனைடெட் தோட்டம் என்றும் யுபி தோட்டம் என்றும் பின்னர் யுபி ஆறுமுகம் பிள்ளை தோட்டம் என்றும் பெயர் மாற்றம் கண்டதில் 3000 இந்தியர்கள் வேலை செய்தனர்.





அப்போது உறுவான இலங்கை சௌமிய மூர்த்தித் தொண்டைமான் மற்றும் ஆறுமுகம் பிள்ளை நட்பு தற்போது பேரன் பேத்தி திருமண உறவில் முடிந்தது




தொடர்ந்து பினாங்கில் நிபோங் திபால், கிரியான், ஜாவி, ஜூரு, கெடாவில் பாடாங் சிராய் சுங்கை பத்து, சுங்கை தாவார், ஜித்ரா, அலோர் பொங்சு, புக்கிட் ஜூனுன், புக்கிட் தம்புன் போன்ற பல இடங்களில் தோட்டங்களை வாங்கி பதினோரு தோட்டங்களின் பெருநிலக்கிழாராகத் திகழ்ந்தார். என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை வாங்கிய தோட்டங்களில் பைராம் தோட்டம் மட்டும் தென்னை மரங்கள் கொண்ட தோட்டம். மற்றவையாவும் ரப்பர் மரத் தோட்டங்களே.  இவர் பிற்காலத்தில் துவங்கியது தான் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி அதன் தாளாளராக தந்தை ஆறு நாகராஜனுக்கு பின் இராமேஸ்ரன் உள்ளார். ஆறு நாகராஜன் திருப்பத்தூர் சட்டமன்றத் தேர்தலில் 1977 ஆம் ஆணடில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்,  தற்போது மனமகள் தந்தை இராமேஸ்வரன் கல்லூரித் தாளாளராகவும், ரஜினிகாந்த் மன்றத்தின் மாவட்டச் செயலாளராகவம் உள்ளார்.


ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் தாளாளர் இராமேஸ்வரன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் ஆ. ஜீவன் குமரவேல் தொண்டமான், LLB., M.P., பொது செயலாளர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இரா. சீதை ஸ்ரீ நாச்சியார், MBBCH-BAO, Hons இவர்களை நேரில் சந்தித்து பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச் ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அமைச்சர்கள், ஸ்ரீ தர்வாண்டையார் மற்றும் அதிமுக உள்ளிட்ட பலகட்சிகளின் பகுதித் தலைவர்கள் மற்றும் சமூக பல நாடுகளில் வாழும் பிரமுகர்கள் திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி  மற்றும் வினோஜ் செல்லம் சிவகங்கை மாவட்டத் தலைவர் பாண்டித்துரை உள்ழிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்ஜீவனின் திருமண நிகழ்வில் பங்கேற்க இந்தியாவில் பங்கேற்ற இலங்கை முன்னால் அதிபர் ரணில் -விக்ரமசிங்க நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள மாட்டார் எனவே இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...