SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால் ஊதியமில்லை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
அதீத பணி நெருக்கடி னக் காரணம் கூறி எஸ்.ஐ.ஆர். பணிகளை செவ்வாய்கிழமை முதல் புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைபடுத்திட வேண்டும்; நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் வாங்கும் ஊதியத்துடன் தேர்தல் ஆணையமும் ஊக்க ஊதியம் வழங்குகிறது
இந்தத நிலையில், உரிய திட்டமிடல், பயிற்சிகள் (எதற்கு பயிற்சி) அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாகவும் , நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்.பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் தங்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாக வருவாய்த்துறை ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை முதல் எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில், அனைத்து கிராம உதவியாளர்கள், {தலையாரிகள் )கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர், வட்டாட்சியர் என அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் சிப்பந்திகளும் முழுமையாக ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர்.பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவிகிதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ, இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து துறையின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் நவம்பர் 18-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வேலைநிறுத்தம் அல்லது வேலைநிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது அல்லது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும் ஆர்ப்பாட்டம் அல்லது வேறு எந்த வகையான போராட்டமும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 இன் விதிகள் 20, 22 மற்றும் 22-A ஐ மீறுவதாகும். எனவே ஊழியர்கள் அரசின் விதிகளை மீறக் கூடாது. பணியில் உள்ள ஊழியர்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கக்கூடாது.
மேலும் தொகுப்பூதியம், பகுதி நேரத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். எனவே, எந்தவொரு அரசு ஊழியரும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறினால், ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் பணியில் இல்லாததற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது மேலும் வேலைநிறுத்த நாளில் தற்காலிக விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர , வேறு எந்த விடுப்புக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாது. மேலும் பணிக்கு வந்தவர்களின் விவரத்தை காலை 10.15 மணிக்குள் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





கருத்துகள்