வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.1.10 கோடி சொத்து சேர்த்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம்
செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் வீடு, திருமண மண்டபம், மற்றும் பண்ணை வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிகிறார்.
- 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளராக பணி செய்தார். அப்போது படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி செயலாளர் பணிப் பொறுப்பை கூடுதலாகச் செய்து வந்தார். அந்தக் காலத்தில் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தங்கப்பாண்டியன் வீடு, திருமண மண்டபம், வணிக வளாகம், பண்ணை வீடு, தோட்டம் ஆகியவற்றை விருதுநகர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.1.10 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலார் வீடு, திருமண மண்டபம், பண்ணை வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.


கருத்துகள்