தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் 2015 ஆம் ஆண்டில் ONGC நிறுவனத்துக்கு எதிரான
போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சார்பு அரசியல் சார்ந்த ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.குறிப்பிட்டுக் கூறினால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிற நிலையில் 2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டதற்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய போது பிஆர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ONGC நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் புகார் படி இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நேற்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ONGC நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பிஆர் பாண்டியன் இனி மேல்முறையீடு செய்து தான் வழக்கு நடத்த வேண்டும்.

கருத்துகள்