நீதிபதி நிஷா பானு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பணியிடம் மற்றம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விடுப்பிலிருக்கும் நீதிபதி நிஷா பானு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷா பானுவை பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டதையடுத்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி கேரளா மாநில உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி நிஷா பானு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுவரை நிஷா பானு பணி பதவி ஏற்காமல் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் விடுப்பிலிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கொலீஜியத்துடன் ஆலோசனை நடத்திய பின் குடியரசுத்தலைவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் கேரளா மாநில உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற கொலீஜியம்
நீதிபதி நிஷாபானுவை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து கேரளா மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி , 2025 அன்று இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது.
நீதிபதிநிஷா பானுவை கொலீஜியத்தில் சேர்க்காததைக் காரணம் காட்டி, மாவட்ட நீதித்துறையின் 6 நீதிபதிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்த சென்னை உயர் நீதிமன்றக் கொலீஜியம் அளித்த பரிந்துரையை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது.தர வரிசையில் 3 ஆம் இடத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு கேரளாவிற்கு மாற்றப்பட்டு 8 ஆவது இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





கருத்துகள்