முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2026 தேர்தல் பாஜக சார்பாக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மூவர் குழு

தமிழ்நாடு சட்​ட மன்றப்​பேரவை தேர்​தலுக்கு பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 மத்​திய அமைச்​சர்​களை பொறுப்​பாளர்​களாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை நியமித்​துள்​ளது.

2026 ஆம் ஆண்டு ஆண்டு சட்டப்​பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மெகா கூட்டணியை அமைக்க அதிமுக தற்காலிக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நிலையில் தீவிர முயற்சி எடுத்து வருகி​றார்.ஆனால் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி எனக் கூறும் நிலை, அதிமுக, மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சி பாஜகவின் மூலம் நிறைவேறவில்லை குறிப்பாக, 2021 சட்டப்​பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்ட​ணியில் இருந்த கட்சிகளை​யும், திமுக கூட்ட​ணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்ட​ணியில் சேர்க்கும் பணிகள் நடைபெறுகிறது.


சட்டப்​பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழக தேர்தல் பொறுப்​பாளர்களை பாஜக தலைமை நியமித்​துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்​செய​லாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்​பில், “தமிழ்நாடு சட்டப்​பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேசியத் தலைவர், தேர்தல் பொறுப்​பாளர் மற்றும் இணை பொறுப்​பாளர்களை நியமித்​துள்​ளார். அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழநாடு சட்டப்​பேரவைத் தேர்தல் பொறுப்​பாளராக நியமிக்​கப்​படு​கி​றார். சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்​பொறுப்பு) அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சிவில் விமானப் போக்கு​வரத்​துத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தேர்தல் இணைப் பொறுப்​பாளர்களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்​துள்​ளார்.

கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்​பேரவை தேர்தல் பொறுப்​பாளராக பாஜக தேசிய துணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைஜயந்த் பாண்டா நியமிக்​கப்பட்ட நிலையில், தற்போது மூன்று மத்திய அமைச்​சர்கள் கொண்ட குழுவை புதிய பொறுப்​பாளர்களாக பாஜக அமைத்​திருப்பது குறிப்​பிடத்​தக்கது. அதிமுக கே.பழனிசாமி பியூஷ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போதும் தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்​பாளராக நியமிக்​கப்​பட்​டிருந்​தார்.தமிழ்நாடு அரசியல் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் என்பதா​லும், அதிமுக வின் பழைய பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகக்​கூடிய நண்பர் என்பதா​லும், பியூஷ் கோயல் மீண்டும் பொறுப்பாளராக நியமிக்​கப்​பட்​டுள்ளதாகக் கூறப்​படு​கிறது.


தமிழ்நாடு அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்​படுத்த முடிவு செய்துள்ள இந்தக் குழுவினர், ஓ.பன்​னீர்​செல்வம், டிடிவி. தினகரன் உள்ளிட்​டோரையும் மற்றும் மருத்துவர் இராமதாஸ் - மருத்துவர் அன்புமணி இடையே நிலவி வரும் பிரச்சினையை சரிசெய்து, இருவரையும் ஒன்றாக இணைத்து ஒன்றுபட்ட பாமகவை கூட்ட​ணியில் சேர்க்க தேவையான நடவடிக்​கைகளை எடுக்க இருப்பதாகவம் கூறப்​படு​கிறது. 


அதன் அடிப்படை யில் பியூஷ் கோயல் டி. டி.வி. தினகரனுடன் முதல சந்திப்பை டில்லியில் நிகழ்த்தியுள்ளார் 

அதேபோல், கடந்த முறை அதிமுக​விடம் 20 தொகுதிகளை பெற்ற பாஜக 4 தொகுதி​களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 50 ம் கூட்டணி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு கூடுதல் 20 தொகுதிகளையம் சேர்த்து 70 தொகுதிகளையும் கேட்க பாஜக முடிவு செய்​தது. தொகுதி பங்கீடு பேச்​சு​வார்த்தையில் அதி​முக​வுடன் இந்தக் குழு​வினர் ஈடுபடவுள்​ளனர்​. மத்திய அமைச்சர். பியூஷ் கோயல் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய இணை அமைச்சர் முரளிதர மோஹல் இணைப் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இவர்களின் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என இவர்களின் பணி சிறக்க, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...