ரூபாய் 220வீட்டு வரி ரசீதுக்கு 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி எழுத்தரான செயலாளர் கைது
புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை.
புதுக்கோட்டை மாவ ட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் தச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டீஸ்வரி (வயது 37). கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளவர், நேற்று முன்தினம் தச்சம்பட்டி ஊராட்சி அலுவலகம் சென்று வீட் டுவரி ரசீது தரும்படி கேட்டுள்ளார். அப் போது அங்கிருந்த ஊராட்சிச் செயலாளர் ஆறுமுகம் (வயது 50), வீட்டு வரி ரசீதுக்கு 220 ரூபாய் வந்துள்ளது. அதற்கு ரூபாய்.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டுமெனக் கேட் டுள்ளார். இதில் லஞ் சம் கொடுக்க விரும்பாத தாண்டீஸ்வரி, இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் தறையில் புகார் கொடுத்தார்.
பின்னர் காவல்துறை ஆலோசனையின் பேரில், பனாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய்.3,000 த்துடன் தாண்டீஸ்வரி நேற்று காலை தச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று அங்கிருந்த ஆறுமுகத்திடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர ஜவகர் மற்றும் குழுவினர் ஆறுமுகத்தை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அது தொ டர்பாக அவரிடம் விசா ரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



கருத்துகள்