தீ பற்றி 25 பேர் உயிரிழந்த கோவா யூனியன் பிரதேச விடுதியின் உரிமையாளர்கள் தப்பியோட்டம்: இண்டர்போல் உதவியை நாடியது காவல்துறை
கோவாவில் நடந்த தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விடுதியின் உரிமையாளர்கள் இரண்டு பேர் தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளனர். விபத்து நடந்த மறுநாள் அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாகத் தெரிகிறது.
கோவாவின் வடக்குப் பகுதியிலுள்ள பாஹா கடற்கரைப் பகுதியில் 'பிர்ச் பை ரோமியோ' லேன்' என்ற இரவு நேர விடுதி செயல்படுகிறது. பாகா மற்றும் வகேட்டர் கடற்கரை பகுதிகளில் பிரபலமான இந்த ஹோட்டல் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய நிலையில் 'Romeo Lane The Boutique Resort' என்ற பெயரில் அசாகாவில் புதிய சொகுசு விடுதியாக உள்ளது.
முன்பு இரவு விடுதி, உணவகம் (இத்தாலியன், இந்தியன்). மாடலாகும்
இது கோவாவில் சட்ட சிக்கல்களுக்கு உள்ளான ஒரு புகழ்பெற்ற கடற்கரை ஹோட்டல் ஓராண்டுக்கு முன்னர் துவக்கப்பட்ட இந்த இரவு நேர விடுதியில் வார இறுதி நாட்கள் என்பதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏரளமானோர் கடந்த மூன்று தினம் முன் குவிந்தனர். 100க்கும் மேற்பட்டோர் முதல் தளத்தில் பாப் முறை நடனமாடிக் கொண்டிருந்தனர். அங்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டு மளமளவெனப் பரவியது. இந்த விபத்தில் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் 25 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக கோவா யூனியன் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்த பின் டில்லியிலுள்ள அந்த விடுதியின் உரிமையாளர்களான கௌரவ் மற்றும் சௌரப் லுத்ராவை விசாரணை நடத்தச் சென்ற போது இருவரும் வீட்டில் இல்லை. இதனையடுத்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி இம்மிகிரைசன் CERO குடியேற்றத்துறை அலுவலர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அதில் குறிப்பிடப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.
ஆனால் தொடர்ந்து, இருவரும், விபத்து நடந்த மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் மூலம் தப்பிச் சென்றதை மும்பை விமான நிலையத்தில் உள்ள அயலுறவுத்துறை குடியேற்ற அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
இந்தியாவில் உள்நாட்டு இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளுக்கான சேவை பாதிக்கப்படாதது அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட வாய்ப்பாக அமைந்துள்ளது. காவல்துறை விசாரணையிலிருந்தும் கைதாவதிலிருந்தும் தப்பவே அவர்கள் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் அவர்களைக் கைது செய்ய இண்டர்போல் உதவியை நாட சிபிஐ அலுவலர்களின் உதவியை கோவா யூனியன் பிரதேச காவல்துறையினர் நாடினர். இந்த நிலையில், கோவா ஹோட்டல் தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இந்த நிலையில் கோவா நைட் கிளப்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பியோடிய கிளப் உரிமையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள், மேலும் 3 அலுவலர்கள் பணியிடை நீக்கம்
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உயர் அலுவலர்கள் 3 பேர் பணியிடைநீக்கம்
இரவு விடுதி செயல்பட 2023 ஆம் ஆண்டு அங்கீகார அனுமதி அளித்ததாக, பஞ்சாயத்து இயக்குநர், செயலாளர், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


















கருத்துகள்