வாரிசு சான்றிதழ் தருவதற்கு ரூபாய்.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (36 வயது), விவசாயி. இவர் தாயார் வீரம்மாள் மரணமடைந்தார். அதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ்குமார் மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (46 வயது) என்பவரை அணுகினார்.
அதற்கு அவர் வாரிசு சான்றிதழ் அனுமதிக்க ரூபாய்.3 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், அது குறித்து கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்ததன்பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தலின் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஷ்குமாரிடம் பெற்று அரசு சாட்சி முன்னிலையில் வேதியல் பரிசோதனை நடத்திக் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் அரசு சட்சி முன்னிலையில் கொடுக்குமாறு கூறினர்.
அதன்படி அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ்குமார் கொடுத்தார். அதனை பிரபு வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச் ஒழிப்புத் துறையினர்
அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.





கருத்துகள்