ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிக்க ரூபாய்.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சியின் இளநிலைப் பொறியாளர் கணேசன் கைது
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியின் இளநிலைப் பொறியாளர் கணேசன்,
மதுரை செல்லூர் பகுதியில் வசிக்கும் முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் (வயது 42) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூபாய். 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் அபைக்க ஒப்பந்தம் எடுத்துப் பணி செய்தார். அதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 தொகையும் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்கக் கேட்டு பேரூராட்சியின் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் மீதித் தொகையைக் கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். மீதத்தொகையை விடுவிக்க ரூபாய். 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென இளநிலைப் பொறியாளர் கணேசன் கேட்டார்.
இதனைக் கொடுக்க விரும்பாத பழனிக்குமார் விருதுநகர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி பொறியாளர் கேட்ட லஞ்சப் பணம் தர ஒப்புக்கொண்டார். அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம்.,04 ஆம் தேதி காலை 10 மணிக்கு, அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் முன் பணமாக வேதியியல் பரிசோதனை மூலம் பினாப்தலீன் தடவிய மாற்றம் செய்த ரூபாய். 50 ஆயித்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தார். அஙகு மறைந்திருந்த கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலாண ஆய்வாளர்ர்கள் ஜாஸ்மின் மும்தாஜ் , பூமிநாதன் தலைமையிலான குழுவினர் பணம் பெற்ற கையுடன் பொறியாளர் கணேசனைக் கைது செய்தனர். லஞ்சம் பொற்ற பணத்தைக் கைப்பற்றி, அவரைக் கைது செய்து விசாரித்தனர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர்.









கருத்துகள்