பட்டா பெயர் மாறுதல் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலர் கைது. .விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்,
முன்னுாரைச் சேர்ந்தவர் சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆலங்குப்பத்தில், அவருடைய மனைவி பெயரில், வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்ய கணினி மூலம் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார்
ஆனால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல், ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் தாமதம் செய்துள்ளார். அவர், சுரேந்தரிடம், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த விவரத்தை சுரேந்தர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புகா கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி சுரேந்தரிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை சரவணனிடம் மதியம் சுரேந்தர் கொடுத்தார். பணத்தைப் பெற்ற சரவணனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர்.

கருத்துகள்