58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார்
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிலரங்கு மகாராஷ்டிராவின் புனேவில் டிசம்பர் 29 அன்று நடைபெற உள்ளது.
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சுமூகமான மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது பணிபுரிந்து, அடுத்த 12 மாதங்களில் ஓய்வுபெற உள்ள 350 பேர், இந்த ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கால் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தவிர, ஓய்வுபெற்ற அதிகாரிகளின் நலனுக்காக ஓய்வூதியதாரர் விழிப்புணர்வுத் திட்டத்தையும் இந்தத் துறை நடத்தும். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்காக 11-வது வங்கியாளர் விழிப்புணர்வுத் திட்டத்தையும் இந்தத் துறை நடத்த உள்ளது.
இந்த பயிலரங்குகளின் நோக்கம், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள்/ஓய்வூதியதாரர்களுக்குத் தொடர்புடைய பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதாகும்.
58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கின் போது, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் "கண்காட்சி" ஒன்றும் அமைக்கப்படும், இதில் பல வங்கிகள் தீவிரமாகப் பங்கேற்கும். ஓய்வூதியதாரர் தொடர்பான அனைத்து வங்கிச் சேவைகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். ஓய்வூதியக் கணக்கைத் தொடங்குவது மற்றும் அவர்களுக்குப் பொருத்தமான பல்வேறு திட்டங்களில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வது குறித்தும் வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு வழிகாட்டும்



கருத்துகள்