AI தொடர்பாகக் கூகுள் CEO திரு. சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து.
"AI ல் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்பது குறித்து விளக்கிய திரு சுந்தர் பிச்சை, இதனால் இரவு முழுக்க தன்னால் தூங்கவே முடியவில்லை எனத் தெரிவித்தார். அதாவது ஏஐ காரணமாக நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் பல போலியான டீப்ஃபேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் தன்னை இரவில் தூங்க விடாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டார். AI தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு திரு.சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், "AI எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் இனி வரும் காலங்களில் புதிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக AI உதவும், அதன் அதிவேக வளர்ச்சி காரணமாகச் சில அபாயங்களும் இருப்பதாகவே எச்சரித்தார்.
அவர் மேலும் "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு வகையான பயன்கள் இருக்கவே செய்யும். சில தீய சக்திகள் AI ஐப் பயன்படுத்தி உண்மையில் இருந்து வேறுபடுத்த முடியாத போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிஜமாகவே கவலையளிக்கும் ஒரு பிரச்சனை. இதை நினைத்தால் எனக்குத் தூக்கமே வருவதில்லை.. இவற்றைப் பற்றித் தான் நாம் யோசிக்க வேண்டும். பிரச்சினையைச் சரி செய்து, சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே மனிதக்குலப் பயணமாக இருந்துள்ளது.. அதற்கு இந்தத் தொழில்நுட்பமும் விதிவிலக்கு இல்லை" என்றார். " கூகுள் நிறுவனம் புதிதாக ஒன்றை வெளியிடும்போது என்ன செய்வீர்கள்..
மக்களின் ரியாக்ஷ்னை எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? என்ற வினாவிக்கு அவர், "எனக்கு இது தொடர்பாக ரிப்போர்ட் வரும். ஆனால், அதை தாண்டி நான் நேரடியாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வேன். ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதற்கான வரவேற்பையும், யூசர் அனுபவத்தை நேரடியாகத் தெரிந்து கொள்வேன். சாதாரண யூசர்கள் எப்படி யூஸ் செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முயல்வேன்" என்றார். மக்கள் நலனில் கவனம் கொண்ட நம் மண்ணின் மைந்தன்.






கருத்துகள்