பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
நடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பணியை தொடங்கினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்று துவங்கி 19 ஆம் தேதி வரை நடக்கும் என, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்திருந்தார். அதன்படி, திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மேற்கு வங்காளம், தமிழ்நாடும, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது.
இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. அதனால், இக்கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் தொடர்பாக பிரச்னைகளை எழுப்ப அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன், டில்லி கார் குண்டுவெடிப்பு, டில்லி காற்று மாசு தொடர்பாகவும் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உட்பட ஆறு பேர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், இந்த விவகாரமும் இந்தக் கூட்டத்தொடரில் பூதாகரமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அணுசக்தி, உயர்கல்வி, பெருநிறுவன சட்டம், சண்டிகர் நிர்வாகம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் உட்பட 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 'வந்தே மாதரம்' பாடலின், 150 வது ஆண்டை குறிக்கும் வகையிலான சிறப்பு விவாதம் நடத்தவும் அரசு முடிவு
டில்லியில் பாராளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு வலியுறுத்தல்
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று டிசம்பர் 1ல் தொடங்கியது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்குபா பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில் நடக்கவுள்ள முதல் கூட்டத்தொடர் இது. எனவே, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் சபையை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டில்லியில் நவம்பர் மாதம் ,30 அனைத்துக் கட்சி கூட்டம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கவுரவ் கோகோய், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
அதில் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு வலியுறுத்தல்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை டிச., 1ல் தொடங்குகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா கிளப்பியிருந்த புயலுக்கு பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில் நடக்கவுள்ள முதல் கூட்டத்தொடர் இது. எனவே, ராஜ்யசபா தலைவர் என்ற முறையில் சபையை அவர் எவ்வாறு வழிநடத்திச் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில்,
பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம் 14 மசோதாக்களை நிறைவேற்ற அரசு தரப்பு தீவிரம்
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன் வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற விவாதங்கள் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.









கருத்துகள்