திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ பகுதியில் பெரிய விளக்குத் தூண் உள்ளது. பல நூற்றாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. கோவில் குருக்கள் மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் கோவில் பணியில் சில சோம்பேறி சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள். தென்னிந்திய முகலாயப் படையெடுப்புக்குப் பின்னர் 400 ஆண்டுகள் கழித்து
இஸ்லாமியர்களில் உருது பேசும் கோரிப்பாளையம் வசித்த சிலர் திப்பு சூல்தான் படைத் தளபதி ஹைதரலி தைரியத்தில் பட்டாணிகள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய இறந்த சடலத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா எனப் பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறை பதிந்த கொடியைப் பறக்கவிட்டனர். அதன் பின் காலத்தில் வந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னக் கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீதேறிச் சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உருது இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது என்றவுடன் மதராஸ் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்னக் கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார். சமாதி எனும்
தர்ஹா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என சில உருது பேசும் இஸ்லாமியர்கள் தொடர்ந்த வழக்கு இங்கிலாந்து லண்டன் ப்ரீவ்யூ (சுப்ரீம்) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோவில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்ஹ்வை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதன் பின்னர் கோவில் முன்புறம் உள்ள துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறாமல் தொடர்ந்து வருகிறது.காலங்காலமாக நமது மூதாதையர்கள் நடைமுறையில் இருந்த திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையை சேர்ந்த எழுமலை மற்றும் ராம ரவிக்குமார் உள்ளிட்ட பவரும் இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்கள். அதில் :
ஹிந்து முன்னணிக்குத் தலைவராக இருந்த மதுரை ராஜகோபால், திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த இஸ்லாமியர்கள் எதிர்த்த போது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் அவரது வீட்டு வாசலிலேயே இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது.
தமிழ்நாடு அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; அரசியல் காரணமாக இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோவில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் ஏற்றும் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பு போராடி வருகிறது.
ஆனால், 1967-க்குப் பிறகு சில உருது இஸ்லாமியர்கள் பிரச்ச்னை செய்ததன் காரணமாக மலை உச்சியில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது, இது இன்று வரை தொடர்கிறது.
இந்து அமைப்புகள் இந்தத் தடையை எதிர்த்து, 1996-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அனுமதி வாங்கினர். ஆனால் அரசு சில அரசியல் காரணங்களுக்காக அனுபதிப்பதில்லை. அதற்கு மாற்றாக உச்சிபிள்ளையார் கோவில் மோச்ச தீபம் ஏற்றும் இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று அரசு கூறுகிறது.
இப்பவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் இந்துக்களின் உணர்வை மதிக்காமல் அரசு நடந்து கொள்வது எப்படி நியாயமாகும்..
அரசு நடுநிலையாக செயல்படாமல் ஒரு சாராரை திருப்திபடுத்துவதில் தான் குறியாக இருக்கிறது.. இதற்கான வழி என்ன என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் மாதம் 03 ஆம் தேதியில் மஹா கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பினோம் மலை உச்சியிலுள்ள, பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாகத் தடை இல்லை. தர்ஹாவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. பதிலாக, மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்ட விரோதம். ஆகம விதி மீறல் தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.' என்று மனுதாக்கல் செய்த அணைவரும் குறிப்பிட்டிருந்தார்கள் .
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்புபில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், 'பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார் கோவில் நிர்வாகம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எதிராக வாதிடவே உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி, இந்து சமயநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துக்களைக் கேட்ட நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்துள்ளார்.சிவ பெருமான் காத்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில், திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்த நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடும் நிலையில். அரக்கன்
சூரபத்மனாகிய அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார்.
பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் உதித்த குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வின்வெளியில் நட்சத்திர மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என இவ்விழா கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபத் திருநாள்.
கார்த்திகைதா தீப வழிபாடு பற்றி அகநானூற்றில் காணலாம்.
ஒளவையாரும், திருஞான சம்பந்தப் பெருமானும் கார்த்திகைத் தீப வழிபாட்டைக் குறிப்பிட்டுள்ளனர்.
பஞ்சயூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான
திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி பிழம்பாக மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சிதந்ததன்காரணமாக கார்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபத்தை தரிசனம் செய்தால் சொர்க்க நிலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த மகாதீபத்தை பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் காணமுடியும். இது பலநாள் தெரியும்
கார்த்தகை தீபம் அன்று சொக்கப்பனை எல்லா சிவன்கோவில்களிலும் ஏற்றப்படுகிறது. பனை ஓலையானது பச்சையாக இருந்தாலும் தீபற்றக்கூடியது. பனை ஓலைகளை கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.
சிவபெருமான ஜோதிப் பிழம்பாக காட்சியளித்ததை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனை கொளுத்தி வணங்குவது ஆவயத்தில் மரபு,
மனதில் உள்ள இருளாகிய அறியாமை, பொறாமை ஆகியவற்றை ஒளியாகிய ஞானத்தைக் கொண்டு இறைவன் போக்குகின்றனார் என்பதே சொக்கப்பனையின் தத்துவமாகும்.






















.jpg)

கருத்துகள்