இலங்கையின் முன்னாள் பிரதேச அபிவிருத்தி, ஹிந்து கலாச்சார அமைச்சரும், மட்டக்களப்புக்கான நாடாளுமன்ற உருப்பினருமான கலாநிதி செல்லையா இராஜதுரை கடந்த 7.12.2025 அன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்.
இலங்கைத் தமிழர்களின் குரலாக ஒலித்த கலாநிதி செல்லையா ராஜதுரையின் மறைவு இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மட்டக்களப்பு தொகுதியின் எம்.பியாக இருந்தவர். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக, தொடர்ந்து 33 வருடங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சொல்லின் செல்வர், ஆன்மிக சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
தலயடுத்து, அவருக்கு ஹிந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டும் பணியாற்றினார் ஓய்வில் இந்தியா வந்து வசித்து வந்த நிலையில் காலமானார் அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெற்றது.

கருத்துகள்