தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக!
அ.தி.மு.க.,விலிருந்து முன்னால் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியிலும், அமமுகவை கூட்டணியிலும் இணைப்பது தொடர்பாக கே.பழனிசாமியின் முடிவு தெளிவாகத் தெரியாததால், கடந்த வாரம் தமிழ்நாடு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாகவே தகவல் வருகிறது,
ஜெ.ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நாள் முதல் அதிமுக சுயமாக சுய காலில் நடக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா வி. கே.சசிகலா நடராஜன் குற்றவாளிகள் என தீர்ப்பு வர ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து வி. கே.சசிகலா நடராஜன் சிறை செல்ல கடசியும் சிதறியது காரணம், பெரியகுளம் தேநீர் கடை ஓ.பன்னீர் செல்வம் போல சிலுவம்பாளையம் வெல்லக்கட்டி கோணிப்பை சணல் சாக்கு வியாபாரம் சிலுவம்பாளையம் கே.பழனிசாமியிடம் கட்சியை ஒப்படைத்துச் செனறவர்களிடம் நேர்மையாகத் திருப்பி அவர் வழங்கவில்லை என்பது முதல் நம்பிக்கை மோசடி
இவர் முதல்வராகி இருந்த காலத்தில் மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ, நாடடுக்கோ நல்லது எதுவும், செய்யவில்லை கடசியை தன்வசப் படுத்துவதே நோக்கம் கொண்ட நிலையில், தற்போது அரசியல் களம் மாறிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளதனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈடுபட்டுள்ளார். பா.ம.க.,வில் மருத்துவர் ச.ராமதாஸ், மருத்துவர் இரா.அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள தந்தை மகன் மோதலைச் சரி செய்து, ஜி. கே.மணி இல்லாத ஒன்றிணைந்த பா.ம.க., மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உள்ள தே.மு.தி.க.,வையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பாரதிய ஜனதா கடசியின் மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சிகளின் தலைவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முறை சந்தித்துப் பேசினால், அக்கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து விடும் என, அவருக்கு ஒரு யூகத் தகவலும் சொல்லப்பட்டதாம். அதிமுக இந்த நிலைக்கு வரக் காரணமே மைலாப்பூர் ஆடிட்டர் ஒருவரின் திட்டம் தான், என்பது பலருக்கும் தெரியும்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், டி.டி.வி.தினகரனின் அமமுக எனும் அதிமுக 2, ஓ.பன்னீர்செல்வம் வைத்துள்ள ஒருங்கிணைப்பாளர் அணி எனும் அதிமுக 3 ஆகியோரைச் சேர்த்தால், அ.தி.மு.க., - பா.ஜ க., கூட்டணிக்கு, அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு என ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டது. (தாங்கள் உடைத்த கண்ணாடியை தாங்களே ஒட்டவைக்கும் முயற்சி) ஆனால் நடிகர் விஜய் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் நிலையில் அது சாத்தியமில்லை, அடுத்த தலைமுறை வாக்கு வங்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எனபதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பு நன்றாகவே அறியும்.
இந்த நிலையில் அவர் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, தமிழ்நாடு வந்து, சீட்டுக் கட்டுகளாக களைத்துப் போடடப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா இல்லாத அதிமுக, மற்றும் மனைவி அணி, துனைவி அணி என இரண்டு பிரிவாக உள்ள பா.ம.க., - மற்றும் விஜயகாந்த் இல்லாத தே.மு.தி.க., உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவும், டி. டி.வி.தினகரன் அமமுக {எடப்பாடி முதல்வராக இல்லாத கூட்டணி) மற்றும் தாசில்தார் பணி செய்தவர் பின் அதே அலுவலகத்தில் பியூனாகவம் தயாரான எதற்கும் துணிந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க.,வின் தற்காலிகப் பொதுச்செயலாளர் கே.பழனிசாமியுடனும் பொதுச்செயலாளர் சசிகலா நடராஜனுடனும் ஆலோசிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, மருத்துவர் ச.ராமதாஸ் ஜி. கே. மணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பிடி கொடுக்கவில்லை. இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக, பா.ஜ.க, மேலிடத்துக்கு தகவல் சென்றுள்ளது.
வாய்ப்பிருந்தபோதும், மருத்துவர் ச.ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் வாயிலாக, மருத்துவர் ச.ராமதாசை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துப் பேசினால், அவரும் தே.ஜ.,கட்சிகளின் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என, பா.ஜ.,க தரப்பில் கட்சியின் மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, டி. டி. வி.தினகரன் கட்சி அமமுக , மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து, நேற்று சென்னையில் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் ஆலோசித்து விட்டு பதில் கூறுவதாக, சிலுவம்பாளையம் கே.பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும்.
எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு முடிந்த பின், தமிழ்நாடு வர அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே, டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதென கட்சி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என நேற்று வாணகரதில் நடந்த அதிமுக
பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில்
தமிழ்நாட்டில், அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என பொதுக்குழுவில் திட்டவட்டமாகவும் மற்றும்
செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் ன முடிவு செய்த நிலை
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணைந்துள்ளதற்கு பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதலும் வழங்கியதாக
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை கே. பழனியப்பன் தான் முடிவு செய்வார் எனவும், அது அமித்ஷா இல்லை என மறைமுகமாக அறிவித்து பின்.
நீதித்துறைக்கு தி.மு.க ஆட்சியாளர்கள் சவால் விடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும்,
நீதித்துறை தனித்தன்மையோடு சுயமாகச் செயல்பட, ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தலும்,
கோயம்பத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும்,
சேலம், கோயம்பத்தூர், மதுரைக்கு பஸ் போர்ட் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்,
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; அந்நிய முதலீட்டிலும் தமிழ்நாடு ஆமை வேகம் என பல தீர்மானங்களை நிறைவேற்றவே பாஜகவின் தரப்பு இனி இங்கு வந்து அதை ஆதரிப்பாரா? இல்லை தேஜக கூடடணி ஆடசி தான் என்பாரா எனவும், அப்படியானால் முதல்வர் வேட்பாளர் யார் எனற வினாவும்,அரசியல் கட்சிகள் மத்தியில் எழுகிறது.









































கருத்துகள்