திருபபரங்குன்றம் பாரம்பரிய கார்த்திகைத் தீபம் ஏறற்றுவது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று 09.12.2025 மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது
அரசு தரப்பில் வாதிடுகையில், “தீபம் ஏற்றும் 4 நாட்கள் நிறைவடைந்துவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “இது தீபம் ஏற்றும் வழக்கு மட்டுமல்ல. ஆலயச் சொத்துரிமை சார்ந்ததும் கூட ஆகும்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “டிசம்பர் 17ஆம் தேதி தலைமைச் செயலாளர், மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள மதுரை காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் இநதிய கூட்டணி கட்சிகள் சார்பாக நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 107 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கப்பட்டது.
அதில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கில் உயர்நீதிமனற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு சமூகப் பாதுகாப்பிற்கு எதிராக இருக்கிறது. எனவே அவர் நீதிபதியாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இது போன்று தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் டிசம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான (4ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட) தை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “ஒரு விவகாரத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. CISF படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே சமயம் நீதிமன்ற உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த நிலையில்தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், “உசசநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா? தவறா? என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும்.
கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால், நீதிமன்றத்தைக் காரணம் காட்ட காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்நில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதன்பின்னர் இந்த வழக்கைப் பட்டியலிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில்,
“திருப்பரங்குன்றம் வழக்கு, தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. உங்கள் கோரிக்கையை (தமிழ்நாடு அரசு) ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது நீங்கள் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது” என்று தெரிவித்தார். இந்த நிலையில்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அந்தக் கடிதத்தில், அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிபதி வழக்குகளைத் தீர்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் இந்திய அரசியலமைப்பின் 124 வது பிரிவுடன் படிக்கப்பட்ட 217 வது பிரிவின் கீழ் அவரை நீக்குவதற்கான ஒரு இயக்கத்தை முன்வைக்க முற்பட்டனர், அதில் தி.மு.க., நாடாளுமன்ற கட்சித் தலைவர் கனிமொழி, அக்கட்சியின் மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக உறுப்பினர் ஆ.ராஜா, வி.சி.க. உறுப்பினர் திருமாவளவன், ம.தி.மு.க., உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் 107 உறுப்பினர் கலந்து கொண்டணர் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த உறுப்பினர்கள். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதன் பின்னணியில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இந்திய அணி முடிவு செய்துள்ளது. நீதிபதி சுவாமிநாதனின் நடத்தை பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் மதச்சார்பற்ற செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகளை வைத்தது.












கருத்துகள்