வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்யத் தவறியதற்காக, காஞ்சிபுரம்
மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், சங்கர் கணேஷ் என்பவரை சிறையிலடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் - துணைக் கண்காணிப்பாளர்., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர். மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் துணைக் கண்காணிப்பாளரைக் கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்