இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்தவராவார்.
இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நிலப்பரப்புகளை ஆண்டார். பல்லவ மன்னன் நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா, திருச்சிராப்பள்ளி மாநகரில் இவர் சிலையை நிறுவினார்.பிறகு 2002-ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது, அனால் ஆரம்ப கால வரலாறு என்பதில் களப்பிரர்கள் பற்றி மட்டுமே படித்த நிலையில் களப்பிரர் தான் முத்தரையர் என தற்போது பேசும் நிலை உள்ளது 2025 டிசம்பர் 11 அன்று இவர் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறனின் நினைவுத் அஞ்சல் தலையை இன்று புது டில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவினைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் அடையாளம் கண்டு கௌரவிக்கும் முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார். நிகழ்ச்சியில் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் முத்தரையர் அமைப்பு சார்பாக கே. கே. செல்வக்குமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.களப்பிரர்கள் வழி வந்த இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 675-ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் பிறந்தவரது தந்தை மாறன் பரமேசுவரன் எனும் இளங்கோவதிராயர். கி. பி. 705-ஆம் ஆண்டில் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர நாட்டு படைகளை எதிர்த்துப் பன்னிரண்டு போர்களில் போரிட்டதாக நாலடியார் நூலில் இவர் மரபு வழி குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர்.
அவை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தூண்களில் காணும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாகக் கருதப்படும் தமிழ்ச் சமண நீதி நூலான நாலடியாரில் சுவரன் மாறன் முத்தரையரின் கொடைச் சிறப்பு பேசப்பட்டுள்ளது (பாடல் எண்கள் 200, 296)களப்பிரர்கள் வழி வந்த சுவரன்மாறன் போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்களில்
கொடும்பாளுர்,மணலூர்,திங்களூர்,காந்தலூரஅழுந்தியூர்,காரை,மரங்கூர்,புகழி,அண்ணவாயி(ச)ல்,செம்பொன்மாரி,வெண்கோடல்,
கண்ணனூர்(சமயபுரம்), ஆகும் அவனது சிறப்புப்பெயர்கள்
ஸ்ரீ சத்ரு மல்லன் (பகைவர்களை வென்றவன்), ஸ்ரீகள்வர் கள்வன்,ஸ்ரீ அதிசாகசன், ஸ்ரீ மாறன், அபிமான தீரன்,
சத்ரு கேசரி (பகைவர்களுக்கு சிங்கம்),தமராலயன்,செரு மாறன், வேல் மாறன், சாத்தன் மாறன், தஞ்சைக் கோன், வல்லக் கோன், வான் மாறன் ஆகும்வேள்விக்குடிச் S. I. I. Vol செப்பேடு, களப்பிரர் தமிழ் மண்ணை ஆண்டனர் என்பதையும், மதுரை பாண்டியர்கள் அவர்களை வென்று ஆட்சியை மீட்டனர் என்பதையும் தெளிவாகக் கூறுகிறது, இது தமிழ் வரலாற்று ஆய்வுகளுக்கு மிக முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது. செப்பேடு 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக முக்கியமான பாண்டியர் வரலாற்று ஆவணமாகும், இது பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் வரகுண வர்மன் I (ஜடில பராந்தக) பிராமணருக்கு வேள்விக்குடி கிராமத்தை வழங்கியதை சமஸ்கிருத்து மற்றும் தமிழ் மொழிகளில் பதிவு செய்கிறது, மேலும் களப்பிரர்களின் ஆட்சியையும் பாண்டியர்கள் அவர்களைத் தோற்கடித்ததையும் வெளிப்படுத்துகிறது. இந்த 10 செப்புப்பட்டயமானது, தகடுகளால் ஆனது, தற்போது இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகர் அருங்காட்சியகத்தில் உள்ளது, தமிழ் வரலாற்றின் இருண்ட காலத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகிறது. வேள்விக்குடி என்ற ஊர் சங்க காலத்தில் (பொ.ஆ.மு.300) கொற்கைக் கிழான் நற்கொற்றன் என்ற அந்தணர்க்குப் பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னால் வழங்கப்பட்டுள்ளது.
நடுவிலே நாட்டின் ஆட்சி களப்பிரரிடம் மாறியிருந்தது. அந்நாளிலே தானக்கிராமத்தை அந்த வேற்று அரசனால் கைப்பற்றிவிட்டது. மீண்டும் பாண்டிய வம்சத்தின் அரசு நிறுவப்பட்ட பிறகும் நெடுங்காலம் கழித்தும் (கிட்டத்தட்ட 500 ஆண்டுகள்) அந்த ஊர் முதலில் தானம் பெற்றவனுடைய வம்சத்தாருக்குக் கிடைக்கவில்லை. பாண்டியர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டு 6 அரசர்களின் காலம் முடிந்து 7-ஆம் அரசனான பராந்தக நெடுஞ்சடையனுடைய ஆட்சியிலேயே முன்னர் தானம் பெற்ற அந்தணரின் வாரிசு அச்செய்திகளை அரசரிடம் கூறுகின்றார். மீண்டும் அவ்வூர் பராந்தக நெடுஞ்சடையனின் காலத்தில் (பொ.ஆ. 8-ஆம் நூற்றாண்டில்) சான்றுகளைக் காட்டியப் பிறகு அந்தணரின் வாரிசுக்குக் கொடையாக இருவார தர்மாசனமாக (பிரம்மதாயம்) வழங்கப்படுகிறது. இதுவே இதன் செய்திச் சுருக்கமாகும்.களப்பிரர் ஆட்சி பற்றிய தகவல்களைத் தருவதால், தொல்லியல் வரலாற்றாய்வில் மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது.
திருவேள்விக்குடி திருத்தலத்தில் சிவன்-பார்வதி திருமணத்திற்காக வேள்வி (யாகம்) வளர்க்கப்பட்டதால் பெயர் உண்டானது.மூலவர் மணவாளேஸ்வரர் கோயில் (கல்யாண சுந்தரேஷ்வரர் கோயில்)
திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற 23-வது காவிரி வடகரைத் சைவத் திருத்தலமாகும்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது.







.jpg)









கருத்துகள்