தவெகவில் இணைந்த முன்னால் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் 20 நாட்களில்
கோயம்பத்தூர் ஈரோடு சார்ந்த கொங்கு மண்டலத்திற்கு நடிகர் விஜயை அழைத்து, சொந்த மாவட்ட மண்ணில் பிரமாண்டத்தை காட்டுகிறார்.
ஆளுங்கட்சி திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தின் செல்வாக்கைக் காட்ட முனையும் கே. ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று 18 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் பிரமாண்டமான பொதுக் கூட்டம் எனும் மக்கள் சந்திப்புக்கு 7 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கே. ஏ. செங்கோட்டையன் நேரடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.
அதில் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 75 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பெரிய கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியானதும், தவெக ஆதரவாளர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமாக அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த அனுமதியை ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா வழங்கினார். அனுமதியுடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. நடிகர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான விஜபமங்கலம் நிலம் அந்த இடத்தை பயன்படுத்துவதற்காக ரூபாய்.50,000 வாடகைத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், கூடுதலாக ரூபாய்.50,000 டெபாசிட் தொகையாக முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்திய அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக புதிய சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கு உள்ள அனுபவமும், ஆதரவு வலிமையும் தவெக-வின் வளர்ச்சிக்கு முக்கிய பலமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு மாவட்டப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 20 ஆயிரம் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.பகல் 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோயமுத்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்த்து அங்கிருந்து பெருந்துறையில் ஓய்வெடுத்து பின் பிரச்சாரம் செய்யும் கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். இதை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே பொதுக்கூட்ட மைதானத்தை தேடி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த பிறகு கேஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை. காவல்துறை நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளது. தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வரலாம். கியூ ஆர் கோடு, பாஸ் தேவையில்லை” என்றார்.தேசியக் கட்சிகளுக்கு களம் பல உண்டு மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரமுண்டு. பிராந்தயக் கட்சிகளில்
தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு மாநிலம் விட்டால் வேறிடம் ஏது? எனவே இந்த விஜயம் வெல்லும் என மக்கள் படை ஆட்சி மாற்றம் வேண்டும், அது தேசிய கட்சிகளின் துணையோடல்ல.
தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணிப் போட்டிக்கு வழி காண வேண்டும். வரத்தகச் சூதாடிகள் தேசியம் பேசி திருட நினைப்பர்.
வலதுசாரிகள் ஹிந்து, ஹிந்தி, இந்தியா என்பார் சமுகநீதி எனில் அது எம்மிடம் இல்லை என்பர். நற்றமிழர் நலம் பேண உள்நாட்டு ஊழல் ஒழிக்க விழையும் விஜயின் முயற்சி தொடர்கிறது.அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்தது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆளும் திமுகவை நேரடியாக “தீய சக்தி” என்று முத்திரை குத்தியுள்ளார். “திமுக ஒரு தீய சக்தி... தவெக ஒரு தூய சக்தி. இவ்விரண்டுக்கும் இடையேதான் போட்டி” எனக் கூறி, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நேரடியாக இலக்கு வைத்தார். இது அவரது அரசியல் பயணத்தில் மிகக் கடுமையான தாக்குதல். கரூர் இடியாப்ப சிக்கல் சம்பவத்திற்குப் பிறகு அவர் பங்கேற்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என இந்த உரைக்கு கூடுதல் கவனம் ஏற்பட்டது.
நடிகர் விஜயின் உரை வெறும் விமர்சனத்துடன் நிற்கவில்லை. திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பின்மை, போதைப்பொருள் பரவல் ஆகியவற்றை மிகக் கடுமையாகவே சாடினார். “தமிழ்நாடே சந்தி சிரிக்கிறது” என்று கூறி, ஆளும் கட்சியின் தோல்விகளைப் பட்டியலிட்டார். மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை “தீய சக்தி” என்று அழைத்ததை நினைவுகூர்ந்து, “இப்போதுதான் புரிகிறது” என தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இது தவெகவை “மக்கள் சக்தி”யாகவும், திமுகவை “மக்கள் விரோத”மாகவும் உருவகப்படுத்தும் முயற்சி.
ஆனால் இந்த உரை அரசியல் ரீதியாக எவ்வளவு பொறுப்பானது? விஜய் அரசியலுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. 2024 ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி மாநாட்டிலும், மதுரை மாநாட்டிலும் அவர் திமுகவையும் பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்தார். “இந்திய அளவில் ஒரு கட்சி, தமிழ்நாடு அளவில் ஒரு கட்சி” என்று கூறி பிளவுவாத சக்திகளை சாடினார். ஆனால் ஈரோடு உரையில் நேரடியாக திமுகவை “தீய சக்தி” என அழைத்தது புதிய திருப்பம். இது அவரது ரசிகர் பட்டாளத்தை உற்சாகப்படுத்தினாலும், தமிழக அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தக்கூடியது.
திமுகவின் சாதனைகளை முற்றிலுமாக புறக்கணிப்பது விஜயின் உரையின் பலவீனம். திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றில் பல முன்னேற்றங்கள் உள்ளனவா என்றால். எல்லாவற்றையும் விட ஊழல் மிதமிஞ்சிய நிலை இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம் போன்றவை மக்களிடம் வரவேற்பைப் பெற்றவை. போதைப்பொருள், குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மைதான், ஆனால் அதை மட்டும் எடுத்துக்காட்டி ஒரு கட்சியை “தீய சக்தி” என்று முத்திரை குத்துவது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் திமுகவை “தீய சக்தி” என்று அழைத்தது ஒரு காலகட்டத்தின் அரசியல் உத்தி. இன்று அதை மீண்டும் பயன்படுத்துவது பழைய ஏட்டுச் சுரைக்காயை கறியாக்குவதைப் போல உள்ளது.
திமுக தரப்பில் உடனடி எதிர்வினை வந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விஜயிடம் போய் இப்படி கேள்வி கேட்டிருக்கிறீர்களா?” என்று ஊடகவியலாளர்களிடம் கொந்தளித்தார். செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தவெக விஜய் தூய சக்தி அல்ல” என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். இது திமுகவின் பதற்றத்தை காட்டுகிறது. விஜயின் ரசிகர் ஆதரவு மற்றும் சமூக வலைதள செல்வாக்கு திமுகவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதேநேரம், விஜயின் இத்தகைய கடுமையான வார்த்தைகள் திமுகவை ஒருங்கிணைக்கவும் உதவுமோ எனத் தெரியவில்லை.
2026 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? விஜய் “களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டேன்” என்று அதிமுகவுக்கு மறைமுகமாக குட்டு வைத்தார். இது தவெகவை திமுகவுக்கு நேரடி எதிரியாக நிலைநிறுத்துகிறது. ஆனால் அரசியல் வெற்றி வெறும் ஆவேச உரைகளால் மட்டும் வராது. கொள்கை அடிப்படையில் தெளிவான திட்டங்கள், கூட்டணி உத்திகள், அடிமட்ட அமைப்பு வலுவாக்கம் தேவை. விஜய் இதுவரை ரசிகர் கூட்டங்களை மட்டுமே நம்பியுள்ளார். ஈரோடு உரை அவரது ஆக்ரோஷத்தைக் காட்டினாலும், அரசியல் முதிர்ச்சியை இன்னும் நிரூபிக்க வேண்டியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய சக்தியாக தவெக உருவெடுக்கிறது என்பது உறுதி. ஆனால் “தீய சக்தி – தூய சக்தி” என்ற இருமுனைப் போட்டி உருவாக்குவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா? அரசியல் விவாதங்கள் கொள்கை அடிப்படையில் நடக்க வேண்டும், வார்த்தைப் போராக மாறக்கூடாது. விஜயின் உரை மக்களிடம் எதிரொலிக்கும் அதேநேரம், அது பிளவை அதிகரிக்காமல் ஆக்கபூர்வ விமர்சனமாக மாற வேண்டும். 2026 ஆம் ஆண்டு வரை இன்னும் நிறைய திருப்பங்கள் இருக்கும். மக்கள் தான் இறுதியில் வெற்றியைத் தீர்ப்பளிப்பார்கள் – தீய சக்தியா, தூய சக்தியா என அறியலாம்.தமிழக களமும், போட்டியும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ,திமுக கூட்டணிக்கும்தான்...ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமிதான்( எடப்பாடி பழனிச்சாமி தான் என்றிருந்த நிலை மாறி விஜய் பக்கத்துல காற்று விசத்துவங்குகிறது விட்டுக்கொடுத்து சுதாரித்து கூட்டணியை கட்டமைத்தால் அவர்தான் முதல்வர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை
இதற்கிடையில் கூடும் கூட்டமும் சாதாரணமாகக் கடந்துவிடமுடியாது. திமுக
கட்சி பலம்,அமைப்பு பலம்,தந்தை முதல்வர் இத்தனையும் கொண்டு பிரமாண்ட மேடை,15 ஆயிரம் டன் கரும்பு, 7000 வாழைமரங்கள் இன்னும் பல என வரவேற்பில் தொடங்கி ,ஆளுக்கு ரூபாய் 200 தடபுடலான கறியும் சோறும் என்பது வரை பல நூறு கோடிகள் செலவு செய்து உதயநிதி ஒரு ஹரிஷ்மா லீடராக்க காட்ட முயன்று கூட்டும் கூட்டத்தை விடவும் ,...இது எதுவுமே இல்லாமல் தண்ணீர் பாட்டில்கூட இல்லாமல் விசய்யன்னாவுக்கு சாரை சாரையாக தானா சேரும் கூட்டமும் சாதாரணமானதல்ல.
சந்தானத்தின் பின்னால் நின்று ஹீரோவாக புரோமோட்டாகி வந்த உதயநிதியை விடநடிகர் தலைவர் விசய்க்கு ஹரிஷ்மாவும் இளைஞர்கள்,மாணவர்கள் குழந்தைகள் எனக் கூடும் கூட்டமும் அதிகம்.
ஆணால் எடப்பாடி பழனிசாமி அணியும், விஜயின் கட்சியும் தனித்தனியாக களம் காண்பதும்,அதைவிட எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் விஜயின்பக்கம் சாய நினைக்கும் கட்சிகளாலும்,ஆட்களாலும் புதிய நிலை வரலாம் அதில் தான் பலவுப் வியூகம்
தெற்கே இருக்கும் திருச்செந்தூர் முருகனில் துவங்கி திருத்தனி முருகன் வரை ஆறுபடை வீடுகள் அனைத்து தெய்வங்களும் நின்று தமிழகத்தை காக்கட்டும்..

















கருத்துகள்