தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்ததாரரிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூபாய்.1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66 (2) ன் கீழ், ஊழல் குறித்து விசாரிக்க காவல்துறை முதல் தகவல் அறிக்கை. பதிவு செய்யக்கோரி, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி மாநில தலைமைச் செயலாளர், காவல் படைத் தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் ஆகியவற்றிற்கு அமலாக்கத்துறை 258 பக்க ஆவணத்தை அனுப்பியதில். ஆளும் தி.மு.க. அரசின் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த ஒரு பெரிய ஊழலைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசுக்கு இது அமலாக்கத்துறை எழுதிய இரண்டாவது கடிதமாகும்.
அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று அன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த வேலைக்கான பண மோசடி குறித்து முதல் தகவல் அறிக்கை. பதிவு செய்யக்கோரி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
இத்துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அலுவலர்கள் போன்ற பணிகளைப் பெற பல அபேட்சகர்கள் ரூபாய்.25 லட்சம் முதல் ரூபாய்.35 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை அப்போது குற்றம் சாட்டியது.ஒரு விசாரணை நிறுவனம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை இல்லாமல், பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறையால் தன்னிச்சையாக நடத்த முடியாது. இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2) ஆனது, அமலாக்கத்துறை பிற முகமைகளுடன் ஆதாரங்களைப் பகிரவும், திட்டமிடப்பட்ட குற்றங்களின் கீழ் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தவும் அதிகாரம் வழங்குவதன் மூலம் பணமோசடி விசாரணையைத் துவங்க முடியும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் கூட்டாளிகளுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. முறைகேடாகவோ அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்டோ ஒதுக்கப்பட்ட டெண்டர்களின் மூலம் இந்த ஒப்பந்தக்காரர்கள் பயனடைந்தார்கள் என்றும், கே. என்.நேருவின் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை கூறியது. இநநிலையில் வழக்கு பதிவு செய்யுமா அல்லது எப்போதும் போல கண்டும் காணாமல் இருக்கப் போகிறதா என்பதை இன்னும் சில தினங்களில் அறியலாம் இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
கருத்துகள்