மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). காலமானார்
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார், முன்னால் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார்.
மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீலை நாம் இழந்துவிட்டோம். சிவராஜ் தனது நீண்ட பொதுவாழ்வில் மக்களவை சபாநாயகர், மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சிவராஜ் பாட்டீல் மறைவால் மிகுந்த சோகமடைந்தேன். மிகவும் நீண்ட காலம் அரசியல் அனுபவம் பெற்ற அவர் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய மந்திரி, மராட்டிய சபாநாயகர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்