தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி விடுமுறை புதிய பொறுப்பு டி ஜி பி நியமனம்.
உடல் நிலை சரியில்லாததால் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விடுமுறை
பொறுப்பு டிஜிபி பொறுப்பை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய் குமார் சிங் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழ்நாடு அரசு மருத்துவ விடுப்பில் சென்ற பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் இருப்பதால் அபய்குமார் சிங்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் கவனிப்பார்.தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றி வந்த வெங்கட்ராமன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் (DVAC) இயக்குநரான அபய் குமார் சிங் புதிய பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், திடீரென நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் (DVAC) இயக்குநராக இருக்கும் அபய்குமார் சிங் கூடுதலாகப் பொறுப்பு டிஜிபி பதவியை வகிப்பார் எனத் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல், மீண்டும் 'பொறுப்பு டிஜிபி' நியமிக்கப்பட்டது குறித்து தமிழக அரசியலில் ஏற்கனவே கடும் விவாதங்கள் எழுந்து வந்தன. பொறுப்பு டிஜிபி எனும் நடைமுறை எங்குமே கிடையாது என்றும், தமிழகத்தில் மட்டும்தான் இப்படி நியமிக்கப்படுவதாகவும் கூறி, பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்குப் பதிலளித்த ஆளும் தி.மு.க, பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்திலும் தற்போது வரை பொறுப்பு டிஜிபிதான் பதவியில் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது. இத்தகைய அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனின் மருத்துவ விடுப்பால், தற்போது அபய்குமார் சிங் இந்தப் பதவியை ஏற்றுள்ளார். பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மருத்துவ விடுப்பில் செவலதென்பது முன்பே பலமுறை நடந்துள்ளது.
DGP யே அப்படிப் போயிருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்த்து அங்கிருந்து அப்படியே விடுப்பில் போனதில்லை. அது முற்றிலும் புதிது. முதன் முதலாக நடப்பதாகும்..
பொறுப்புக் காவல்துறை தலைமை இயக்குனர் வெங்கட்ராமன் விடுப்பில் போனதே, பொறுப்பு என்ற வார்த்தை அடைப்புக்குள் வந்ததனால் தான்; என காவல்துறை வட்டாரத்தில் மிகவும் சாதாரணமாகவே விளக்கம் சொல்லி விடுவார்கள்.
இப்போது அதே இடத்துக்கு இன்னொரு DGP வந்திருக்கிறார், அவர் - அபய்குமார் சிங். தற்போது ஆகச்சிறந்த நேர்மையாளர், ஆனால் அவரும்; பொறுப்பு DGP தான்.
தமிழ்நாடு மாநிலக் காவல்துறை (பொறுப்பு) தலைமை இயக்குனர் பதவியை, மூன்று மாத காலத்துக்குள் இரண்டு இகாப அதிகார அலுவலர்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பதும் நாட்டில் இதுதான் முதல்முறை.




கருத்துகள்