கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள வண்ணான் குளத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை
அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொளத்தூர் ஜிகேஎம் காலனியிலுள்ள வண்ணான் குளத்தில் சுமார் 250-350 ஏக்கர் நிலம் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற அரசாணை 540 ன்படி உத்தரவிடக் கோரியும் செம்பியம் கோ. தேவராஜன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, அம்பத்தூர் மண்டலம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வண்ணான் குளத்தின் கணிசமான பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வருவாய்த்துறை, டிஎன்யுஎச்டிபி மற்றும் ஜிசிசிக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 3 துறைகளைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைக்குமாறு நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.பகுதி மழைநீரில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்து வந்தனர். அதனால் அந்த நீர்நிலை இடம் வண்ணான்குட்டை என்றானது சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கருத்தாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியை ராணுவத்தினருக்கும், சலவை தொழிலாளர்களுக்கும் குடிசை மாற்றுவாரியம் மூலம் கட்டிடம் கட்டி பாதி நீர்நிலை ஆக்கிரமிப்பு நடந்த நிலையில் தற்போது சிக்கவில் பலரும் அக்கிரமப் பிரவேச ஆக்கிரமிப்பு நடந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை வந்துள்ளது ஜி.கே.எம்., காலனி குடியிருப்பு பகுதி, வண்ணான் குளம் உள்ள இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டோம். ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.- என்பது குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் பதில்.ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தக் குளம் தற்போது சுருங்கி குட்டை போல் மாறிவிட்டது. அதே வேளையில், குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் கம்பீரமாகவே உயர்ந்து நிற்கின்றன. அவை இடித்து அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு வந்த நிலையில் அதிலிருந்து ஆக்கிரமிப்பு நபர்கள் மீது நடவடிக்கை எடுகக லஞ்ச ஊழல் நபர்கள் அதிகமான மாநகராட்சி நிர்வாகம் எடுக்குமா என்பது சந்தேகம் தான்இதே நிலைமை தான் காரைக்குடி தாலுகா சங்கராபுரம் பஞ்சாயத்து சார்ந்த கழனிவாசல் கண்மாய் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து நிலமாற்றம் செய்து வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு அதை ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிமித்து குடியிருந்த நபர்களுக்கு சட்ட விரோதமாக வழங்குவதை இந்த உத்தரவை cover to the order மூலம் தடுக்க இயலும்.




கருத்துகள்