வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குப் பிரதமரின் தேசிய சிறார் விருது ஆண்டுதோறும் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்துதவிய 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு சேர்ந்த ஷ்ரவன் சிங் (வயது 10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினார்.இன்று ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
விருதைப் பெற்ற ஷ்ரவன் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரின்போது எங்கள் ஊர் எல்லை அருகே ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால், அவர்களுக்காக நாள்தோறும் பால், தேநீர், மோர், லஸ்ஸி கொடுத்தேன்.
இந்த விருது பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனைக் கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார்.
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் டிசம்பர் மாதம் 26 ஆம் நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை வழங்கிகா கௌரவித்தார்.



கருத்துகள்