திருவண்ணாமலை மஹாதீபம் கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ஆம் நாள் திருவிழா. இந்த மகாதீபம்
இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" எனப்படுகிறது.
காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பதுவே பரணி தீபமாகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இந்தத் தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படும். 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.
பஞ்ச பூத ஸ்தலத்தில் அக்கினி ஸ்தலமாகும்.
தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மஹாதீபம் எனலாம். இந்தத் தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் காணும் மலை 2668 அடி உயரம் கொண்டது. மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட
கொப்பரையை 1668- ஆம் ஆண்டு பிரதானிவேங்கடபதி ஐயர் செய்து கொடுத்தார். பின்பு 1991- ஆம் ஆண்டில் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போதுள்ளது. இது பக்தர்களின் உபயம். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் அன்னை மீனாட்சி உதித்த குலமான மீனவராவர்.
இத் தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது. இந்த ஆணடு மஹாதீபம் அரநிலையத்துறை சில அடாவடி செயல்கள் காடடினாலும் தீபம் சிறப்பாக நடைபெற்றது. இனி வரலாற்றுப் பார்வை.









கருத்துகள்