தமிழருவி மணியன் மனைவி பிரேமாகுமாரி இன்று காலை 10.30 மணிக்கு காலமானார்
அவருடைய இறுதிச் சடங்கு நாளை காலை விருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசியல்வாதியும் எழுத்தாளரும் பேச்சாளருமான தற்போது தமாக பிரமுகர் தெய்வசிகாமணி என்ற தமிழருவி மணியன் முன்னாள் முதலமைச்சர் கு.காமராசர் இவரை தமிழருவி எனப் பாராட்டினார். அன்று முதல் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார். பல அரசியல் கட்சிகளில் களம் கண்டு காந்திய மக்கள் இயக்கம் அமைப்பை நிறுவிளார் .சென்னை சூளையில் அமைந்துள்ள இந்து ஒற்றுமைக் குழு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசில்
காமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் எனும் நிறுவன காங்கிரஸில் இணைந்து பின் ஜனதா கட்சியில் காமராசரின் மறைவிற்குப் பின்னர் இணைந்து தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருந்த பின்
ஜனதாதளத்தில் இணைந்து இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டேவுடன் இணைந்து அதன் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.
பின்னர் இராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்திலிருந்து பிரிந்து லோக்சக்தி கட்சியைத் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
பின்னர் தமிழக லோக்சக்தி எனக் கட்சி தொடங்கினார்.
தமிழ் மாநிலக் காங்கிரசில் மூப்பனாரின் அழைப்பை ஏற்று தமிழக லோக்சக்தி கட்சியை கலைந்து தமாகாவில் இணைந்து அதன் பொதுச்செயலர் ஆனார்
இந்திய தேசிய காங்கிரசில்
இந்திய தேசிய காங்கிரசில் த.மா.கா. இணைந்தபொழுது இந்திய் தேசிய காங்கிரசில் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளரானார், 2008 ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சனையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்டு அங்கிருந்து விலகினார்.
2009 ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.
புதிய அரசியல் கட்சியை 10 பிப்ரவரி 2014 அன்று தொடங்கியவர், பின்னர் அதை 2022 ஆம் ஆண்டில் காமராசர் மக்கள் கட்சி என மாற்றினார்.
நடிகர் ரஜினிகாந்த் துவங்காத கட்சியின் மேற்பார்வையாளர்
2020ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க முனைந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக 2020 டிசம்பர் மாதம் 5ஆம் நாள் நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சி தொடங்கப்படவே இல்லை. பின் அவர் தற்போது சமீபத்தில் தமாகவில் ஜி. கே.வாசன் முன்னிலையில் அவரது கட்சியை இணைத்தார்.


கருத்துகள்